Kandhu Vatti Sattam
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். மனிதனாக பிறந்த அனைவருமே நம் நாட்டில் இருக்கும் அனைத்து சட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு சட்டத்தை பற்றி இந்த பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவின் மூலம் வட்டிக்கு பணம் கொடுத்து அதிகமாக வட்டி வசூலித்தால் என்ன சட்டம் என்று பார்க்கலாம் வாங்க.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்..! |
கந்துவட்டி தடை சட்டம்:
நாம் வாழும் இந்த நாட்டில் தினமும் கந்து வட்டி கொடுமையால் பல மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கந்து வட்டி கொடுமையில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு அரசு அதீத வட்டிவசூல் தடைச் சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த வட்டி வசூல் தடை சட்டமானது 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அதிக வட்டி வசூலிப்பதை தடை செய்வதற்காக ஆளுநரின் ஆணைப்படி கொண்டுவரப்பட்டது.கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க ஆட்களை கொண்டு கடன் வாங்கியவர்களை தாக்கியும், வட்டி கொடுத்தவரின் தொந்தரவால் கடன் வாங்கியவர் தற்கொலை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இது போன்ற நிலையை தடுக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
நேர்மையற்ற முறையில் மற்றவருடைய சொத்துக்களைப் பயன்படுத்தினால் இந்த தண்டனை தான்..! |
இந்த சட்டத்தின் தண்டனை என்ன..?
வியாபார நோக்கில் ஒரு வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் கந்துவட்டி வசூலித்தால் அது குற்றமாகும். அதேபோல் தனி உபயோகத்திற்காக 12 சதவீதற்கு மேல் வட்டி வசூலிப்பதும் குற்றமாகும்.
அப்படி இதுபோல வட்டி வசூலித்தால் அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் , 30,000 ரூபாய் அபராதமும் இச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் கடன் பெற்றவர் குற்றவியல் நீதிமன்றத்தை அணுகினால் வட்டி வசூலித்தவர் 15 நாட்களுக்குள் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும். பின் பணம் கொடுத்தவர் கூடுதலாக வட்டி வசூலித்தது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்குவதற்கு முன் நீங்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |