Keyboard Shortcuts F1 to F12 in Tamil
கம்பூட்டர் என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தும் கருவியாக மாறிவிட்டது. ஏனென்றால் கம்ப்யூட்டர் எல்லா வேலைகளிலும் பயன்பாடு அதிகரித்து விட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கம்ப்யூட்டரை ஆர்வமாக கற்று கொள்கிறார்கள். கம்ப்யூட்டரில் என்னென்ன இருக்கிறது, அதை எப்படி பயன்படுத்துவது என்று தான் கற்று கொள்கிறார்களே தவிர அதில் உள்ள shortcuts-யை கற்று கொள்ள மாட்டுகிறார்கள். keyboard shortcuts-யை தெரிந்து கொள்வதன் மூலம் உங்களின் வேலைகளை ஈசியாக முடிக்க முடியும். keyboard-ல் இருக்கும் F1 முதல் F12 வரைக்கும் உள்ள short cuts-யை தெரிந்து கொள்வோம்.
F1 to F12 Shortcut keys:
F1 – Help screen-யை திறக்க வேண்டுமென்றால் F1-யை பிரஸ் செய்யலாம்.
F2– செலக்ட் செய்த File மற்றும் Folder-ன் பெயரை மாற்றுவதற்கு உதவுகிறது.
F3– நீங்கள் திறந்திருக்கும் வலைத்தளத்தில் Search செய்வதற்கு பயன்படுத்தலாம்.
F4– alt+ f4 நீங்கள் பயன்டுத்துகின்ற வலைத்தளத்தை close செய்வதற்கு பயன்படுத்தலாம்.
F5– இந்த key வலைத்தளத்தை Refresh மற்றும் Reload செய்வதற்கு. உதவுகிறது.
F6– பெரும்பாலான இணையத்தளத்தில் கர்சரை (cruser) முகவரிப் (address) பட்டியில் செல்ல உதவுகிறது.
F7- Microsoft word-ல் எழுத்து பிழைகளை சரி செய்ய உதவுகின்து.
F8– கணினியை பயன்படுத்தும் போது விண்டோஸில் Boot menu -வை இயங்க வைக்க உதவுகின்றது.
F9– மைக்ரோசாஃப்ட் வேர்டில் ஒரு ஆவணத்தைப் புதுப்பித்து, அவுட்லுக்கில் மின்னஞ்சல்களை அனுப்புகிறது மற்றும் பெறுகிறது.
F10– திறந்த அப்ளிகேஷனை Menu bar-யை ஆக்டிவேட் செய்வதற்கும், Mouse-ல் Right clik செய்வதற்கு பதிலாக shift f10 அழுத்தி பயன்படுத்தலாம்.
F11– இண்டர்நெட் தளத்தின் திரையை பெரிதாகவும் அதை மீண்டும் சிறிதாகவும் மாற்ற இது பயன்படுகின்றது.
F12– மைக்ரோசாப்ட் Word-ல் Save as dialog box தளத்தை திறக்க இது உதவி செய்கின்றது.
Computer கீபோர்டு ஷார்ட்கட் Keys தமிழில் ..!
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |