Korean Hair And Skin Care Routine Home Remedies
கேரளா பெண்கள், கொரியன் பெண்களை பார்த்தால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு சற்று பொறாமையாக தான் இருக்கும். ஏனென்றால் அவர்களின் முகம் தங்கம் போல் ஜொலிக்கும். இதற்கு என்ன தான் செய்கிறார்கள் என்ற கேள்வியை தனக்குள்ளேயே கேட்டு கொள்வார்கள். இவர்கள் முக அழகிற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை தான் பயன்படுத்துகிறார்கள். சரி வாங்க அப்படி என்ன பொருட்களை பயன்படுத்தி தங்களின் முகத்தையும், முடியையும் பாதுகாக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Korean Skin Whitening Secrets Home Remedies:
கொரியாவில் உள்ள பெண்கள் தோல் பராமிற்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துவது அரிசி தண்ணீர் தான். இவை சூரிய ஒளியில் இருந்து வரும் தோல் சேதத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
அரிசியை உங்கள் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் அரிசி ஊற வைத்த தண்ணீரை குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைக்கவும். பிறகு இந்த தண்ணீரில் ஒரு காட்டன் துணியை வைத்து நினைத்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி முகம் அழகாக காட்சியளிக்கும்.
அனைத்து முடியையும் ஒரே மாதிரி அடர்த்தியாக வளர வைக்க இது ஒன்று போதும்..
Korean Hair Growth Secrets:
ஒரு கப் அரிசி எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் அரிசி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை தேய்த்து தலைக்கு குளிக்கவும்.
இது போல் செய்வதினால் முடிகள் வளர ஆரம்பிக்கும். முடிக்கு ஒரு ஊட்டச்சத்தாக பயன்படுகிறது. முடியை பளபளப்பாக வைத்து கொள்ளவும் உதவுகிறது.
பயங்கரமா முடி கொட்டுகிறதா.. கவலையை விடுங்க இதை ட்ரை பண்ணுங்க..
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |