முகத்தில் உள்ள தழும்புகள் போவதற்கு வீட்டு குறிப்புகள்..!

Advertisement

              முகத்தில் உள்ள தழும்பு மறைய

பொதுவாக ஆண்கள் முதல் பெண்கள் வரை தன் முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதிலும்  குறிப்பாக பெண்களுக்கு முகத்தில் சிறியதாக தழும்புகள் வந்து விட்டால் அவதிப்படுகிறார்கள். தழும்புகளை சரி செய்வதற்கு கடைகளில் விற்கக்கூடிய சோப்புகள் மற்றும் கிரீம் வகைகளை பயன்படுத்தி வந்தாலும் அதனால் ஒரு பயனும் இருக்காது. அதற்கு எளிமையான முறையில் முகத்தில் இருக்கும் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் போவதற்கு இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

எலுமிச்சை:

 mugathil ulla thalumbugal maraiya in tamil

எலுமிச்சை சாறில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளதால் தழும்புகள் இருக்கும் இடத்தை மங்க செய்கிறது. பருக்கள், தழும்புகள் மற்றும் அம்மை தழும்புகளை போக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. எலுமிச்சை சாறு சில நபர்களுக்கு ஒவ்வாமை உண்டாக்கலாம் அதற்கு  மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பயன்படுத்தலாம்.

எலுமிச்சை சாறு 3 – 4 டீஸ்புன் எடுத்து கொள்ளவும். பிறகு காட்டன் பஞ்சை சிறு உருண்டையாக உருட்டி எலுமிச்சை சாறில் நனைத்து தழும்புகள் உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறைந்து விடும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

கற்றாழையுடன் இந்த பொருளை கலந்து போட்டால் போதும் 5 நாட்களிலேயே உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்..!

தேன் :

mugathil ulla karumpulli poga tips tamil

தேன் முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் வடுக்களை குறைப்பதற்கு  உதவுகிறது. தேனில் 70 விதமான வைட்டமின்கள் சத்துக்களை கொண்டது. தேனை பருகுவதால் தொற்றுநோய்கள், மலேரியா மற்றும் அம்மை போன்றவையை குணப்படுத்தும்.

தழும்புகள் உள்ள இடத்தில் சுத்தமான தேனை தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரை விட்டு கழுவ வேண்டும். தேனில் பாக்டீரியா தன்மைகளை கொண்டதால் தழும்புகளை சரி செய்ய உதவுகிறது. இதனை தொடர்ந்து அப்ளை  செய்து வந்தால் தழும்புகள் குறைய தொடங்கி விடும்.

கற்றாழை ஜெல்:

 how to remove old scars in tamil

கற்றாழை முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது. இது அழற்சியை எதிர்த்து போராடும் தன்மையை கொண்டது. கற்றாழையில் கால்சியம், பொட்டாசியம், குளோரின், மற்றும் சத்துக்கள் உள்ளது. சருமத்தில் எற்படும் வடுக்கள் மற்றும் தழும்புகளை குறைப்பதற்கு கற்றாழை உதவுகிறது.

கற்றாழையில் உள்ள முற்களை நீக்கி விட்டு அதன் உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் தழும்புகள் மற்றும் வடுக்கள் குறைய ஆரம்பித்து விடும்.

உங்கள் சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய இதை மட்டும் செய்யும் போதும்..!

வெங்காயம்: how to remove scars from face permanently in tamil

வெங்காயம் தலை முடிக்கும் மட்டுமில்லாமல் சருமத்திற்கும் பெரிதும் உதவுகிறது. இதில் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. சருமத்தில் இருக்க கூடிய கொலாஜன் தன்மையை மேம்படுத்தி சருமத்தில் ஏற்படும் பிரச்சனையை குறைக்க உதவுகிறது.

வெங்காயத்தின் சாறை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். அதுவே அதிகம் காயமும், தழும்புகள் இருந்தால் தினசரி மூன்று அல்லது நான்கு முறை அப்ளை செய்ய வேண்டும்.

வெங்காயத்தின் சாறை பயன்படுத்தினால் மாய்சுரைசர் என்ற சீரத்தை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

ஆலிவ் எண்ணெய்:

 

 best treatment for scars on face in tamil

மற்ற எண்ணெய்களை விட ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முகத்தில் ஏற்படும் தழும்புகள் மற்றும் வடுக்கள் போன்ற எல்லா பிரச்சனைகளிலிருந்தும் இருந்து விடுபட உதவுகிறது.

ஆலிவ் எண்ணெயை தழும்பு உள்ள இடத்தில் மசாஜ் செய்து வர தழும்புகளை சரி செய்து விடலாம். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement