பொடுகு பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்ய இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்க..

neem for dandruff treatment in tamil

பொடுகு பிரச்சனைக்கு இயற்கை தீர்வு

இன்றைய காலத்தில் இளம் வயதினருக்கே முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவு முறை போன்ற காரணத்தினால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் முக்கியமாக பொடுகு பிரச்சனை இருந்தால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் எண்ணெய் மற்றும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனை பயன்படுத்திய இரண்டு நாட்களுக்கு பொடுகு பிரச்சனை இல்லாமல் இருக்கும். மறுபடியும் பொடுகு பிரச்சனை வந்துவிடும். இதற்கு இயற்கையான முறையில் நிரந்தரமான தீர்வை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பொடுகை சரி செய்ய வேப்பிலை:

பொடுகை சரி செய்ய வேப்பிலை

வேப்பிலையை பறித்து சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றவும், அதில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை இலைகளை சேர்த்து கொதிக்க விடவும். இலைகளின் சாயம் தண்ணீரில் இறங்கும் வரை கொடுக்க விடவும். சாயம் இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு ஆறியதும் இலைகள் இல்லாமல் சாயத்தை மட்டும் வடிக்கட்டி கொள்ளவும். இதனை தலை முடி முழுவதும் தடவி 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

வேப்பிலை எண்ணெய்:

பொடுகை சரி செய்ய வேப்பிலை

வேப்பிலை இலைகளை பறித்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை வடிக்கட்டியை பயன்படுத்தி வடிக்கட்டி சாயத்தை மட்டும் எடுத்து கொள்ளவும். பிறகு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும், அதனுடன் அரைத்து வைத்த சாயத்தை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து நன்றாக சுண்டி நிறம் மாறியதும் அடுப்பை அனைத்து விடவும். இந்த எண்ணெய் ஆறியதும் தலை முடி முழுவதும் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும். இந்த பேக்கை வாரத்தில் 2 அல்லது 3 முறை பயன்படுத்த வேண்டும்.

Summer சீசனில் முகம் கருத்து போய்விடுகிறதா.. ரொம்ப Simple இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க

வேப்பிலை பவுடர்:

பொடுகை சரி செய்ய வேப்பிலை

வேப்பிலையை பறித்து காய வைத்து கொள்ளவும். நன்றாக காய்ந்ததும் மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியிலிருந்த்து உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 30 நிமிடம் கழித்து தலை தேய்த்து குளிக்க வேண்டும். இதை போல் வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு பிரச்சனையை சரி செய்து விடலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil