வெறும் ஒரே ஒரு ஸ்பூனால் உங்கள் வெள்ளை முடி கருமையாக மாறும்..!

How to Change White Hair To Black Hair in Tamil

நரை முடி கருப்பாக இயற்கை டை – How to Change White Hair To Black Hair in Tamil

நண்பர்களே வணக்கம் எப்போதும் நமக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் தலை முடி பிரச்சனை தான். தலை முடி கொட்டினால் கூட அதிக கவலை பட மாட்டார்கள். நரை முடி வந்துவிட்டால் அதிகமாக பயம் கொள்வார்கள். அந்த அளவிற்கு நரை முடி பிரச்சனை தான் இங்கு பலருக்கும் இருக்கும் பிரச்சனை ஆகும்.  சிலர் இதற்கு நிறைய எண்ணெய் ஷாம்பு என்று மாற்றியும் அதனை பயன்படுத்தி விட்டார்கள். ஆனாலும் அதற்கு சரியான ரிசல்ட் கிடைக்கவில்லை என்று தான் சொல்வார்கள். ஆனால் எப்போதும்  நரை முடி போக வேண்டுமென்றால் அதற்கு இயற்கை முறை தான் சரியாக இருக்கும். ஆகவே இந்த பதிவின் வாயிலாக நாம் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி நரை முடியை கருமையாக மாற்றலாம் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

நரை முடி கருப்பாக இயற்கை டை:

  • கடுகு எண்ணெய்
  • கருஞ்சீரகம்
  • மருதாணி பொடி
  • வெந்தயம்

செய்முறை:

கடுகு எண்ணெய்

முதலில் இரும்பு கடாய் வைத்து அதில் 200 ML கடுகு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைக்கவேண்டும். அதன் பின்பு அதில் 2 ஸ்பூன் வெந்தயம், 2 ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ளவும். இது அனைத்தையும் நன்கு கொதிக்கவிடவும். அதுவும் மிதமான தீயில் தான் இருக்க வேண்டும்.

கரும்புள்ளிகளை ஒரே நாள் இரவில் மறைய செய்யலாம்.. ரொம்ப சிம்பிள் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

​கருஞ்சீரகம்

அடுத்து அது கொதிக்கும் போது அதில் மருதாணி பொடி கலந்துகொள்ளவும்.  அதனையும் சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்கவிடவும். அதேபோல மிதமான தீயில் தான் இதனை கொதிக்க விடவும்.

மருதாணி பொடி

அதன் பின்பு அடுப்பை அனைத்து விட்டு 1 மணி நேரம் அப்படியே ஆறவிட்டு அதன் பின்பு ஒரு துணி அல்லது வடிகட்டி வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது  பார்ப்பதற்கு ஹேர் டை போல் வந்துவிட்டது.

பயன்படுத்தும் முறை:

முதலில் தலையில் எந்த பக்கம் நரை உள்ளதோ அந்த பக்கத்தில் உங்கள் கைகளால் டையை தொட்டு தலை முடியில் அப்ளை செய்யவும். அப்போது தான் தலை முடி 20 நிமிடம் அப்படியே விட்டு அதனை பின்பு சீயக்காய் போட்டு குளிக்கவும். இதனை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்தால் போதுமானது அதன் பின்பு உங்கள் நரை முடி கருமையாக மாறும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil