2500 sq ft House Cost in India
பொதுவாக நாம் புதிதாக ஒரு வீடு கட்டப் போகிறோம் என்று கூறினால் நம் முன்னோர்கள் வீட்டை கட்டி செலவு செய்து பார் அப்போது தான் அதனுடைய அருமை தெரியும் என்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால் ஒரு இடத்தினை காட்டி இதில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று இன்ஜினியரிங்யிடம் கூறிவிடுகிறார்கள். இந்த இன்ஜினியரிங் தான் எந்த இடத்தில் என்ன வைக்க வேண்டும் என்ற முழு முடிவினையும் தீர்மானம் செய்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் ஒரு குறிப்பிட்ட சதுர அடியில் உள்ள இடத்தில் வீடு கட்ட ஆகும் செலவும் மற்றும் பொருட்கள் பற்றிய விவரங்கள் தெரிவது இல்லை. ஆகவே இன்று 2500 சதுர அடியில் உள்ள இடத்தில் வீடு கட்ட ஆகும் செலவு எவ்வளவு என்பது பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
1100 சதுர அடியில் புது வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா
2500 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு:
மணல், ஜன்னல், சிமெண்ட், ஜல்லி, மரப்பொருட்கள், பெயிண்ட் மற்றும் அதற்கு தேவையான இதர பொருட்கள், ஜன்னல் மற்றும் கதவு, எஃகு, மின்சாரதிற்கு தேவையான பொருட்கள், தண்ணீர் வசதி அமைப்பதற்கான பொருட்கள் போன்ற அனைத்து பொருட்களும் பொதுவாக ஒரு வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் ஆகும்.
செங்கல் எவ்வளவு:
2500 சதுர அடியில் உள்ள ஒரு வீட்டினை கட்டுவதற்கு மொத்தமாக 55,000 செங்கல் தேவைப்படுகிறது. அப்படி என்றால் ஒரு செங்கலின் விலை தோராயமாக 11 ரூபாய் என்று விற்கப்படுகிறது. ஆகவே மொத்தமாக செங்கலிற்கு மட்டும் 6,05,000 ரூபாய் தோராயமாக தேவைப்படும்.
சிமெண்ட் மூட்டை எவ்வளவு:
2500 sq ft அளவில் உள்ள இந்த வீடு கட்டுவதற்கு 1000 மூட்டை சிமெண்ட் தேவைப்படும். ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை தோராயமாக 400 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.
அப்படி என்றால் 1000 மூட்டை சிமெண்ட் வாங்க 4,00,000 ரூபாய் தோராயமாக தேவைப்படும்.
கம்பி எவ்வளவு:
நீங்கள் 2500 சதுர அடியில் வீடு கட்டப்போகிறீர்கள் என்றால் அதுற்கு தோராயமாக 10 1/2 டன் கம்பி ஆனது தேவைப்படுகிறது. மேலும் 1 டன் கம்பியின் விலை தோராயமாக 75,000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுவதனால் மொத்தமாக உங்களுக்கு கம்பி வாங்க மட்டும் 7,87,500 ரூபாய் வேண்டும்.
800 சதுரடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் அதற்கான செலவுகள் எவ்வளவு தெரியுமா |
மணல் எவ்வளவு:
பொதுவாக வீடு கட்ட P மற்றும் M சாண்ட் என இரண்டு வகையான மணல் தேவைப்படுகிறது. ஆகவே M சாண்ட் மணல் 50 யூனிட் தேவைப்படுகிறது. ஒரு யூனிட் 3,800 ரூபாய் என்றால் 50 யூனிட் விலை 1,90,000 ரூபாய் தேவைப்படும்.
மேலும் P சாண்ட் மணல் 15 யூனிட் தேவைப்படுகிறது. ஒரு யூனிட் 5,000 ரூபாய் என்றால் 15 யூனிட் விலை 75,000 ரூபாய் தேவைப்படும்.
ஜல்லி எவ்வளவு:
வீடு கட்டுவதற்கு 3/4 அளவில் உள்ள மற்றும் 1 1/2 அளவில் உள்ள ஜல்லி தேவைப்படும். அப்படி என்றால் 1 1/2 அளவில் (40 mm aggregate) ஜல்லியானது மொத்தம் 10 யூனிட் தேவைப்படும். 1 யூனிட் ஜல்லியின் விலை 2,800 ரூபாய் என்பதால் 10 யூனிட் ஜல்லி வாங்குவதற்கு தோராயமாக 28,000 ரூபாய் தேவைப்படும்.
அதேபோல் 3/4 அளவில் (20 mm aggregate) உள்ள ஜல்லியில் 25 யூனிட் தேவைப்படும். 1 யூனிட்டின் விலை 3,000 ரூபாய் என்றால் 25 யூனிட் ஜல்லி வாங்குவதற்கு 75,000 ரூபாய் தோராயமாக தேவைப்படும்.
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களின் செலவு மட்டும் இல்லாமல் ஆட்கள் செலவு, டைல்ஸ் மற்றும் பெயிண்ட் என இன்னும் எண்ணற்ற செலவு உள்ளது. அதேபோல் பொருட்களின் விலையும் தரத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.
ஆகவே 2500 சதுர அடியில் உள்ள வீட்டினை கட்ட தோராயமாக 50,00,000 ரூபாய் முதலில் கையில் வைத்துக்கொள்வது நல்லது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |