30 Laddu Ingredients in Tamil
பொதுவாக பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே நாம் அனைவரின் வீடுகளிலும் பல வகையான பலகாரங்களை செய்து சுவைப்போம். அப்படி பண்டிகை நாட்கள் வந்துவிட்டாலே நாம் நமது வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் சேர்த்து பலகாரங்களை செய்ய வேண்டி இருக்கும். அதற்கு ஏற்றார் போல் நாம் பலகாரங்களை தயாரிக்க தேவையான பொருட்களை வாங்க வேண்டி இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எவ்வளவு பொருட்கள் சேர்த்தால் நமக்கு எவ்வளவு பலகாரம் கிடைக்கும் என்பது தெரியாது. அதனால் தான் இன்றைய பதிவில் 30 பூந்தி லட்டு செய்ய தேவையான பொருட்களின் அளவு மற்றும் செய்முறையை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
30 பூந்தி லட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 1/4 கிலோ
- மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
- உப்பு – 1 சிட்டிகை
- பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
- சக்கரை – 1/4 கிலோ
- ஏலக்காய் – 5
- கிராம்பு – 4
- முந்திரி – 10
- காய்ந்த திராட்சை – 6
- நெய் – 4 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் நிற ஃபுட் கலர் – 1 சிட்டிகை
- எண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
ஹல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி
பூந்தி லட்டு செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 கிலோ கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள்தூள், 1 சிட்டிகை உப்பு, 1 சிட்டிகை பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி அதில் பூந்தி கரண்டி அல்லது ஜல்லி கரண்டியில் சிறிது சிறிதாக பூந்தி மாவை போட்டு தேய்க்கவும்.
பிறகு 20 முதல் 30 வினாடிகளுக்கு பிறகு எண்ணெயை வடித்து விட்டு பூந்தி எடுக்கவும். எல்லா மாவிலும் பூந்தி செய்து ஒரு கிச்சன் பேப்பரில் வைத்து எண்ணெயை வடித்துவிடவும்.
இந்த தீபாவளிக்கு சுவையான காஜு கத்லி ஈசியா செய்வது எப்படி
ஸ்டேப் – 3
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1/4 கிலோ சர்க்கரையை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 5-8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு அதனுடன் 5 ஏலக்காய் மற்றும் 4 கிராம்பு ஆகியவற்றை பொடியாக்கி சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பின்னர் அதில் 1 சிட்டிகை மஞ்சள் நிற ஃபுட் கலர் சேர்த்து 1 கம்பி பதம் வரும் வரை சர்க்கரை பாகு காய்ச்சவும். அடுத்து அதில் நாம் தயாரித்து வைத்துள்ள பூந்தியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
1 கப் பூந்தியை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் – 5
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து அதில் 10 முந்திரி மற்றும் 6 காய்ந்த திராட்சையை சேர்த்து நன்கு வறுத்து நாம் தயாரித்து வைத்துள்ள பூந்தியுடன் சேர்த்து கொள்ளவும்.
பின்னர் அதில் நாம் அரைத்து வைத்திருந்த 1 கப் பூந்தியையும் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்களுக்கு ஆறவைக்கவும். ஓரளவு ஆறிய பின்னர் உங்களுக்கு விருப்பமான அளவில் உருட்டினீர்கள் என்றால் சுவையான லட்டு தயார்.
ஐயர் வீட்டு கருவேப்பிலை பொடியின் ரகசியம் இதுதான்
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |