Kaju Katli Recipe in Tamil
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து பலவகையான விஷயங்களை பின்பற்றி வருகின்றோம். அப்படி நாம் பின்பற்றும் பலவகையான விஷயங்களில் ஒன்று தான் முக்கியமான விசேஷ நாட்களில் இனிப்பு மற்றும் பலகார வகைகளை செய்து சாப்பிடுவது மற்றும் மற்றவர்களுக்கு பகிருவது. அதேபோல் தான் தீபாவளி பண்டிகை அன்றும் நமது வீடுகளில் பலவகையான இனிப்பு மற்றும் பலகார வகைகளை செய்து சாப்பிடுவது மற்றும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வோம். அன்றைய நாளில் வருட வருடம் செய்து சாப்பிடு ஒரே மாதிரியான இனிப்பு மற்றும் பலகார வகைகளை செய்து சாப்பிடாமல் ஏதாவது ஒரு புதிய வகையான இனிப்பு மற்றும் பலகாரங்களை செய்து சுவைக்க வேண்டும் என்ற ஆசை நாம் அனைவரின் மனத்திலேயும் இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் காஜு கத்லியை ஈசியா செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
காஜு கத்லி செய்வது எப்படி.?
மிகவும் சுவையான காஜு கத்லியை மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- முந்திரி – 2 கப்
- சர்க்கரை – 1 கப்
- பால் பவுடர் – 1/4 கப்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்
ஐயர் வீட்டு கருவேப்பிலை பொடியின் ரகசியம் இதுதான்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் முந்திரி பருப்பை சேர்த்து நன்கு பொடி பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் சலித்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் சர்க்கரை மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப் – 3
அது நன்கு கொதித்து ஒரு கம்பி பதம் வந்தவுடன் அதனுடன் நாம் அரைத்து சலித்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 கப் பால் பவுடரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து நன்கு கலந்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் அது நன்கு சூடு ஆறியவுடன் அதனை நன்கு பிசைந்து சப்பாத்தி தேய்க்கும் கட்டையை பயன்படுத்தி தேய்த்து கொள்ளுங்கள்.
பிறகு அதனை டைமண்ட் வடிவில் நறுக்கி கொள்ளுங்கள். இப்பொழுது நமது சுவையான காஜு கத்லி தயாராகிவிட்டது. வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த தீபாவளிக்கு இதனை செய்து சுவைத்து பாருங்கள்.
பிரியாணி மசாலா பொடியை இப்படி பக்குவமா அரைச்சு வைச்சிக்கோங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |