Iyer Veetu Karuveppilai Podi Recipe in Tamil
பொதுவாக உணவு என்றாலே நாம் அனைவருக்குமே மிக மிக அதிக அளவு பிடித்த ஒரு விஷயம் ஆகும். அதிலும் குறிப்பாக சைவ உணவு என்றால் அனைவருக்குமே மிக மிக அதிக அளவு பிடிக்கும். என்னதான் அசைவ உணவினை நாம் மிகவும் விரும்பி சாப்பிட்டாலும் அதனை தொடர்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டே இருக்க முடியாது. அப்படி சாப்பிட்டாலும் நமது உடலுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டுவிடும். அதிலும் குறிப்பாக சைவ பிரியர்கள் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை இருக்கும் அதாவது ஐயர் வீட்டு உணவு வகைகளை ஒரு முறையாவது சுவைத்துவிட வேண்டும் என்பது தான். அதனால் தான் இன்றைய பதிவில் ஐயர் வீட்டு கருவேப்பிலை பொடி செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஐயர் கருவேப்பிலை பொடி செய்வது எப்படி:
காம காமக்கும் சுவையுடன் உள்ள ஐயர் வீட்டு கருவேப்பிலை பொடி செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- காய்ந்த மிளகாய் – 7
- போட்டு கடலை – 25 கிராம்
- உளுத்தம் பருப்பு – 25 கிராம்
- வெள்ளை எள்ளு – 50 கிராம்
- துவரம் பருப்பு – 25 கிராம்
- கடலை பருப்பு – 25 கிராம்
- பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
- புளி – 1/2 நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் – 1/4 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
பிரியாணி மசாலா பொடியை இப்படி பக்குவமா அரைச்சு வைச்சிக்கோங்க
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு கருவேப்பிலையை தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு சுத்தம் செய்துவிட்டு 3 முதல் 4 மணிநேரம் நன்கு வெயிலில் உலர்த்தி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 டீஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதனுடன் நாம் காயவைத்து எடுத்து வைத்துள்ள கருவேப்பிலை மற்றும் 7 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
கரம் மசாலா பொடி இப்படி பக்குவமா மணக்க மணக்க அரைச்சு வைங்க
ஸ்டேப் – 3
அதே கடாயில் நாம் எடுத்து வைத்துள்ள 25 கிராம் போட்டு கடலை, 25 கிராம் உளுத்தம் பருப்பு, 50 கிராம் வெள்ளை எள்ளு, 25 கிராம் துவரம் பருப்பு, 25 கிராம் கடலை பருப்பு மற்றும் 1/2 நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்து வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து நாம் முதலில் வறுத்து வைத்திருந்த கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய்யை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே நாம் வறுத்து வைத்திருந்த மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
இறுதியாக அதனுடனுடன் 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
இதனை நீங்கள் இட்லி, தோசை அல்லது சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் சுவை சும்மா தாறுமாறா இருக்கும்.
கோவில் புளியோதரை சுவையில் இனி வீட்டிலே செய்ய பொடி இப்படி செஞ்ச போதும்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |