ஹல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி..?

Ukkarai Sweet Recipe in Tamil

Ukkarai Sweet Recipe in Tamil

பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நம்மிடம் உள்ள ஒரு சிறப்பான பண்பு என்றால் அது விருந்தோம்பல் தான். அதாவது ஏதாவது ஒரு முக்கியமான நாட்கள் வந்துவிட்டாலே நமது வீடுகளில் பலவகையான பலகாரங்களை செய்து நாமும் மற்றவர்களும் பகிர்ந்து உண்ணுவோம். அப்படி தான் தீபாவளி அன்றும் பலவகையான பலகாரங்களை செய்து நாமும் மற்றவர்களும் பகிர்ந்து உண்ணுவோம். அன்றைய தினத்தில் நாம் வருட வருடம் செய்து சுவைக்கும் பலகார வகைகளை விட்டுவிட்டு வேறு ஏதாவது புதிய வகையான பலகார வகைகளை செய்து சுவைக்க வேண்டும் என்று நாம் அனைவருக்குமே ஆசை இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் ஹல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Ukkarai Recipe in Tamil:

Ukkarai Recipe in Tamil

இந்த தீபாவளிக்கு செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ஸ்வீட்டை செய்து சுவைத்து மகிழுங்கள். அதற்கு முன்பு அந்த உக்காரை ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. பாசி பருப்பு – 1 கப்
  2. வெல்லம் – 750 கிராம் 
  3. நெய் – 1 1/2 கப் 
  4. ரவை – 1 கப் 
  5. ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் 
  6. முந்திரி – 10 
  7. தண்ணீர் – தேவையான அளவு

இந்த தீபாவளிக்கு சுவையான காஜு கத்லி ஈசியா செய்வது எப்படி

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பாசி பருப்பினை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு குக்கரை வைத்து அதில் நாம் வறுத்து வைத்துள்ள 1 கப் பாசி பருப்பினை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரை ஊற்றி 3 விசில் வைத்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 750 கிராம் வெல்லம் மற்றும் 1/2 கப் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

ஐயர் வீட்டு கருவேப்பிலை பொடியின் ரகசியம் இதுதான்

ஸ்டேப் – 3

அடுத்து ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் 10 முந்திரியை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 1/2 கப் நெய் மற்றும் 1 கப் ரவை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

Chettinad ukkarai recipe in tamil

ரவை நன்கு வெந்த பிறகு அதனுடன் நாம் வேகவைத்து எடுத்து வைத்துள்ள பாசி பருப்பு மற்றும் தயாரித்து வைத்துள்ள வெல்ல கரைசல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அவை ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்த பிறகு அதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள முந்திரி, 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் 3/4 கப் நெய் ஆகியவற்றை நன்கு கலந்து இறக்கினால் சுவையான உக்காரை ஸ்வீட் தயாராகிவிடும்.

பிரியாணி மசாலா பொடியை இப்படி பக்குவமா அரைச்சு வைச்சிக்கோங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!