3000 sq ft House Plans Cost in Tamil
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் அது தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்டவேண்டும் என்பது தான். அதாவது தங்களது கனவு வீட்டினை அப்படி கட்டவேண்டும் இப்படி கட்ட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவார்கள். அதற்கான பிளான் எல்லாம் போடுவார்கள். அப்படி நாம் மிகவும் ஆடம்பரமாக வீடு கட்ட வேண்டும் என்றால் முதலில் அதற்கு எவ்வளவு செலவு ஆகும். நம்மிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். இதனை பற்றி தான் நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். எனவே தான் இன்றைய பதிவில் 3000 சதுரடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
3000 சதுரடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்:
3000 சதுர அடி வீடு கட்டுவதற்கு சிமெண்ட் 1200 மூட்டை தேவைப்படும். ஒரு மூட்டை 400 ரூபாய் என்றால் 1200 முட்டையின் விலை 4,80,000 ரூபாய் தேவைப்படும்.
அடுத்து ஸ்டீல் 15 டன் தேவைப்படும். ஒரு டன் 75,000 ரூபாய் அப்போ 15 டன் ஸ்டீல் விலை 11,25,000 ரூபாய் ஆகும்.
M சாண்ட் 60 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 3,800 ரூபாய் என்றால் 60 யூனிட் மணல் வாங்குவதற்கு 2,28,000 ரூபாய் தேவைப்படும்.
P சாண்ட் 18 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 5000 ரூபாய் என்றால் 18 யூனிட் விலை 90,000 ரூபாய் தேவைப்படும்.
2BHK கூடிய வீடு கட்டுவதற்கு இவ்வளவு கம்மியான பணத்துல கட்டி விடலாமா
20 mm aggregate 30 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலை 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 30 யூனிட் விலை 90,000 ரூபாய் செலவு ஆகும்.
40 mm aggregate 12 யூனிட் வேண்டும். ஒரு யூனிட் விலை 2,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 12 யூனிட் விலை 33,600 ரூபாய் தேவைப்படும்.
செங்கல் 66,000 கல் தேவைப்படும். ஒரு கல் 11 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அப்போ 11000 கல்லின் விலை 7,26,000 ரூபாய் தேவைப்படும்.
டைல்ஸ் 3,600 தேவைப்படும். ஒரு டைல்ஸ் 55 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதற்காக நமக்கு 1,98,000 ரூபாய் தேவைப்படும்.
மேல் கூறப்பட்ள்ள பொருட்கள் மட்டும் வாங்குவதற்கு மொத்த தொகையாக தோராயமாக 29,70,600 ரூபாய் தேவைப்படும்.
3 பெட்ரூமுடன் கூடிய வீடு கட்டுவதற்கு செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா
மேல் கூறப்பட்டுள்ளவை முக்கியமாக வாங்க கூடிய செலவுகள் மட்டும் தான் பதிவிட்டுள்ளோம். இது இல்லாமல் ஆட்கள் கூலி, கதவு, ஜன்னல், பெயிண்ட் அடிப்பதற்கான செலவு, பைப் போடுவதற்கான செலவுகள் எல்லாம் இருக்கின்றது. இந்த செலவுகள் மேல் கூறப்பட்டுள்ள செலவுகள் என சேர்த்து தோராயமாக 3000 சதுர அடி வீடு கட்டுவதற்கு 40 லட்சம் தேவைப்படும்.
1000 பேருக்கு சொல்லி பெண்ணிற்கு திருமணம் செய்யணும்னா எவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |