3 மா நிலம் இருந்தால் போதும் 3 மாதத்தில் 60,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Advertisement

Cost of Cultivation of Paddy Per 3ma Land in Tamil

நாம் வாழும் இந்த உலகில் உள்ள தொழில்களிலேயே மிகவும் புனிதமான மற்றும் மிகவும் கஷ்டமான தொழில் தான் விவசாயம். அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் உழவர்களை கடவுளாக மதித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் அவ்வளவு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றே கூறவேண்டும். இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு இந்த விவசாயத்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை புரிய வைத்துவிட்டால் அவர்களே விவசாயத்தை காத்து செழிக்க வைத்துவிடுவார்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

3 மா நிலத்தில் நெல் பயிரிடுவதற்கு எவ்வளவு செலவாகும்:

3 maa nilathil nel sagupadi seivatharku agum selavu in tamil

உழவு செலவு:

நீங்கள் 3 மா நிலத்தில் நெல்லினை நடவு செய்வதற்கு இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். அப்போது தான் அதில் உள்ள செடிகள் எல்லாம் அழிந்து பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். ஒரு முறை உழவு செய்வதற்கு 500 ரூபாய் என்றால் இரண்டு முறை உழவு செய்வதற்கு 1000 ரூபாய் தேவைப்படும்.

நாத்து செலவு:

3 மா நிலத்தில் நடுவதற்கு 9 கட்டு நாத்து தேவைப்படும். ஒரு கட்டு நாத்தில் 100 புடி நாத்து இருக்கும். ஒரு கட்டு நாத்தின் விலை 500 ரூபாய் அப்போ 9 கட்டின் நாத்தின் விலை 4,500 ரூபாய் தேவைப்படும். அதுவே மிசின் நடவு செய்தால் 3 கட்டு நாத்து போதுமானது.

100 குழி இடம் இருந்தால் 3 மாதத்திற்கு ஒரு முறை 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா

நடவு செலவு:

3 மா வயலில் நடவு செய்வதற்கு 15 ஆட்கள் வேண்டும். ஒரு ஆளுக்கு 200 ரூபாய் என்றால் 3,000 ரூபாய் செலவாகும்.

களை எடுக்க ஆகும் செலவு:

நடவு செய்து 1 மாதத்தில் களை எடுக்க வேண்டும். அதற்கு 15 ஆட்கள் தேவைப்படும். 1 ஆளுக்கு 200 ரூபாய் என்றால் 15 ஆட்களுக்கு 3,000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஒரு களை எடுத்த பிறகு அடுத்த 45-வது நாளில் மறுமுறை களை எடுக்க வேண்டும். அதற்கும் 15 ஆட்கள் தேவைப்படும். 1 ஆளுக்கு 200 ரூபாய் என்றால் 15 ஆட்களுக்கு 3,000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.

3BHK உடைய வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா

மருந்து செலவு:

நடவு நட்ட 5 நாள் அடி உரம் கொடுக்க வேண்டும். அதற்கு DAP 39 கிலோவும், பொட்டாஷ் 12 கிலோவும் தேவைப்படும். DAP 1 கிலோ விலை 119 ரூபாய் ஆகும். DAP 39 கிலோவிற்கு 4,641 ரூபாய் செலவு ஆகும்.

பொட்டாஷ் 1 கிலோ விலை 250 ரூபாய் ஆகும். 12 கிலோவிற்கு 3,000 ரூபாய் செலவு ஆகும். அடுத்து 15 வது நாள் தண்ணீர் மருந்து அடிக்க வேண்டும். அதற்கு DAP 45 கிலோவும், யூரியா 18 கிலோவும் தேவைப்படும்.

DAP 1 கிலோ விலை 119 ரூபாய் ஆகும். DAP 45 கிலோவிற்கு 5,355 ரூபாய் செலவு ஆகும். அடுத்து 1 கிலோ யூரியாவின் விலை 20 ரூபாய் என்றால் 18 கிலோ யூரியாவின் விலை 360 ரூபாய் செலவு ஆகும்.

அடுத்து 30 வது நாள் தண்ணீர் மருந்து அடிக்க வேண்டியிருக்கும். அதற்கு 5,715 ரூபாய் செலவாகும்.

அறுவடை:

மிசின் வைத்து அறுக்கும் போது 1 மணி நேரத்திற்கு 1500 ரூபாய் செலவாகும். 3 நிலத்தை அறுவடை செய்வதற்கு 1 1/2 மணிநேரம் ஆகும். அதற்கான 2,250 ரூபாய் தேவைப்படும்.

வருமானம்:

3 நிலத்தில் பயிரிட்டால் 45 மூட்டை நெல் கிடைக்கும். இதனை விற்கும் போது நமக்கு தோராயமாக 45,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை வருமானமாக பெறலாம். இந்த விலையானது நாம் விதைக்கப்பட்டிருக்கும் பயிரை பொறுத்து வருமானம் மாறுபடும்.

1000 பேருக்கு சொல்லி பெண்ணிற்கு திருமணம் செய்யணும்னா எவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement