மூங்கிலின் பல்நோக்கு திறன் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Bamboo Multi Purpose

பொதுவாக இந்த உலகத்தில் எண்ணற்ற மனிதர்கள் மற்றும் பொருட்கள் என படைக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் தான் நிலவுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒருவரின் திறமை என்பது நம்முடன் நெருங்கி பழகி இருந்தால் மட்டுமே அவற்றை கணித்து சொல்ல முடியும். அதுவே நமக்கு அவர்களை பற்றி சரியாக தெரியவில்லை என்றால் வெறும் வெளிதோற்றத்தினை மட்டும் வைத்து அவர்களின் திறமை பற்றி சொல்ல முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறன் இருந்து கொண்டு தான் உள்ளது. அதுவே ஒரு பொருள் என்று நாம் அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட திறன்கள் அடங்கி உள்ளது. ஆனால் அவற்றை பற்றி நமக்கு சரியாக தெரிவது இல்லை. அதனால் இன்றைய பதிவில் மூங்கிலில் உள்ள பல்நோக்கு திறன் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

மூங்கில் பற்றிய தகவல்:

மூங்கில் பற்றிய தகவல்

மூங்கில் ஆனது புல் வகையான சார்ந்த ஒரு தாவரமாக இருந்தாலும் கூட இதில் அளவில் மிகவும் பெரியதாக காணப்படுகிறது. இந்த மூங்கில் மரம் ஆனது தோராயமாக நாள் ஒன்று 1 மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டதாக உள்ளது.

இத்தகைய மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியதாக இருந்தாலும் கூட இதனுடைய ஆயுட்காலம் 60 வருடங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போதும் 60 அடி உயரம் வரை வளரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

மேலும் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கோஸ்டிரிக்கா, கென்யா, சீனா, இந்தியா, , இந்தோனேசியா, நேபாளம் மற்றும் பங்களாதேசு ஆகிய நாடுகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.

அதேபோல் இந்தியாவில் மட்டும் சுமார் 156 வகை மூங்கில்கள் பயிரிடப்பட்டு வருகிறது.

மூங்கிலின் வகைகள்:

  1. முள்
  2. முள்ளில்லா

மூங்கில் வேறு பெயர்கள்:

அரி, அமை, ஆம்பல், கழை, காம்பு, கண், கண்டகி, கனை, பணை, பாதிரி, புறக்காழ், முடங்கல், சீசகம், சந்தி மற்றும் தட்டை என பல வகையான பெயர்கள் உள்ளது.

இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலேயே வெந்தயத்தை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே. 

மூங்கிலின் பல்நோக்கு திறன்:

மூங்கில்

உணவு:

மூங்கிலில் இருந்து கிடைக்கக்கூடிய இளம் குருத்துக்களை சரியான முறையில் அலசி அதனை ஊறுகாய் மற்றும் பொரியல் முறையில் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம்முடைய வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து விடும்.

பர்னிச்சர் பொருட்கள்:

நாம் மொத்த மூங்கில் மரத்தில் இருந்து அதனை ஒவ்வொன்றாக வெட்டும் போது நிறைய மரங்கள் கிடைக்கிறது. இத்தகைய மரத்தினை வைத்து எண்ணற்ற பர்னிச்சர் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அனைவருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய பெரும்பாலான பர்னிச்சர் பொருட்கள் மற்றும் பாய், மூங்கில் தட்டு, மூங்கில் கூடை மற்றும் புல்லாங்குழல் என இவற்றை அனைத்தும் தயாரிக்கப்படுகிறது.

புதிய கட்டுமான பொருட்கள்:

இத்தகைய மூங்கிலை வைத்து நிறைய வகையான புதிய கட்டுமான பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் இதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் சிறந்த ஒன்றாகவும் உள்ளது.

மேலும் இந்தியா மற்றும் சீனாவில் காகித கூழ் தயாரிப்பிற்கு அத்தியாவசியமான ஒன்றாக இது உள்ளது.

உடலுக்கு மருந்துகள்:

நம்முடைய உடலில் வரும் ஆஸ்துமா, இருமல் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு மருந்துகள் தயாரிக்க தேவைப்படும் பொருட்களில் மூங்கிலின் பங்கும் அதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இது மாடு, யானை மற்றும் குதிரை என இவற்றிற்கு தீவனம் தயாரிக்கவும் பயன்படுகிறது.

இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே கொண்டைக்கடலையை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose
Advertisement