பச்சைப்பயிறு இதற்கெல்லாம் கூட பயன்படுகிறதா..! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!

Advertisement

Multipurpose of Green Gram in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் மூலம் பல பயனுள்ள தகவலை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் அனைவரும் பயன்படுத்தும் பச்சை பயிரின் பல்நோக்கு திறன் பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே நமக்கு பலவகைகளில் பயன்படுகிறது. ஆனால் அவற்றில் ஒரு சில பயன்பாடுகள் மட்டுமே நமக்கு தெரியும். அந்த வகையில்  பச்சைப்பயிறு நமக்கு என்னென்ன வகைகளில் பயன்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். பச்சை பயிறு நமக்கு பல நன்மைகளை அளிக்க கூடியது. எனவே இதனை சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இதனை தவிர வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதனை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பச்சை பயிரின் பல்வேறு பயன்பாடுகள்:

பச்சைப்பயிறு:

பச்சைப்பயிறு

பச்சை பயிறு பழங்காலத்தில் இருந்தே பயிரிடப்படும் பயிறு வகையாகும். இது இந்தியாவில் தான் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இது விக்னா ரேடியாட்டா என்ற அறிவியல் பெயர் கொண்ட ஃபேபேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பருப்பு வகை தாவரமாகும்.

பச்சை பயிறு செடி மஞ்சள் நிற பூக்களையும் பழுப்பு நிற காய்களையும் கொண்ட பருப்பு செடியாகும்.

உங்க வீட்ல ஓமவல்லி செடி இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

பச்சை பயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

  • கலோரிகள்
  • கொழுப்பு 
  • புரதம் 
  • கார்போஹைட்ரேட்டுகள் 
  • நார்ச்சத்து 
  • மாங்கனீசு 
  • மெக்னீசியம் 
  • வைட்டமின் B1 
  • பாஸ்பரஸ்
  • இரும்பு 
  • செம்பு
  • பொட்டாசியம் 
  • துத்தநாகம்

பளபளப்பான சருமத்திற்கு பச்சைப்பயிறு பொடி:

பளபளப்பான சருமத்திற்கு பச்சைப்பயிறு பொடி

பச்சை பயிறு ஒரு சிறந்த அழகு பொருளாகும். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் இயற்கையாகவே சருமத்தை பொலிவாக்கும் தன்மை கொண்டது. பாசிபயிரினை பொடி செய்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகம் பொலிவாகாவும், அழகாகவும் இருக்கும்.

உங்கள் முகம் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமா..? அப்போ பாசிப்பயிரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்..!

ஆரோக்கியமான உடலுக்கு முளைகட்டிய பச்சைப்பயிறு:

முழு பச்சை பயிரினை 4 அல்லது 5 மணிநேரம் ஊறவைத்து பிறகு இதனை ஒரு காட்டன் துணியில் கட்டி ஒரு நாள் இரவு வீட்டில் வைத்து பிறகு இதனை எடுத்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

தலைமுடி வளர்ச்சிக்கு பச்சைப்பயிறு மாவு:

தலைமுடி வளர்ச்சிக்கு பச்சைப்பயிறு மாவு

பச்சை பயிறு மாவு மற்றும் ஊறவைத்த வெந்தயம் இவை இரண்டையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகள் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.

சமையலில் பச்சைப்பயிறு:

 Green Gram Benefits in Tamil

  • பாசிப்பருப்பு சாம்பார்
  • பாசிப்பருப்பு கஞ்சி
  • பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்
  • பாசிப்பருப்பு பாயாசம்
  • பாசிப்பருப்பு மசியல்
  • பாசிப்பருப்பு அல்வா

இதுபோன்ற பலவிதமான பாசிப்பருப்பு உணவு வகைகள் உள்ளன.

வேர்க்கடலையை சாப்பிட்டால் மட்டும் போதாது இது கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..!

கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது:

 பச்சை பயிரின் பயன்கள்

கர்ப்பிணிகள் தினமும் வேகவைத்த பச்சை பயிரினை உட்கொண்டு வருவதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தையை சென்றடையும். இது எளிதில் ஜீரணமடையும் பருப்பு என்பதால் இதனை கர்ப்பிணிகள் உணவில் தவறாமல் சேர்த்து கொள்ளலாம்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 

 

Advertisement