Multipurpose of Mudakathan Keerai in Tamil
கீரை வகைகள் அனைத்துமே நம் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியவை. அதற்காக அனைவருமே வீட்டில் ஏதாவதொரு கீரையை வளர்த்து வருவோம். அந்த வகையில் உங்கள் வீடுகளிலோ அல்லது வீட்டு பக்கத்திலோ வளர கூடிய முடக்கத்தான் கீரை நமக்கு என்னென்ன வகைகளில் பயன்படுகிறது என்பதனை இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுமே பல்நோக்கு வகையில் நமக்கு பயன்படுகிறது. ஆனால் அவற்றின் பல்நோக்கு பயன்பாடுகள் நம்மில் பல பேருக்கு தெரியாது. எனவே ஒவ்வொரு பொருளின் பல்நோக்கு பயனை நம் பொதுநலம் பதிவில் தினமும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நம் வீடு பகுதிகளில் கிடைக்க கூடிய முடக்கத்தான் கீரை நமக்கு என்னென்ன வகையில் பயன்படுகிறது என்பதனை இப்பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குப்பையில் கிடக்கும் குப்பைமேனியில் இவ்வளவு விஷயம் இருக்கா..? |
முடக்கத்தான் செடி:
முடக்கத்தான் செடி “பலூன் செடி” என்றும் அழைக்கப்படுகிறது. இது வெப்ப மண்டலம் அல்லது மித வெப்ப மண்டலங்களில் காணப்படும் தாவர செடியாகும். முடக்கத்தானின் அறிவியல் பெயர் Cardiospermum Halicacabum ஆகும்.
முடக்கத்தான் பெயர்கள்:
மொழிகள் | முடக்கத்தான் பெயர் |
இந்தி | கன்படா |
தெலுங்கு | புத்த ககாரா |
கன்னடம் | அக்னிபல்லி |
மலையாளம் | ஜோதிஷ்மதி |
முடக்கத்தான் கீரையில் உள்ள ஊட்டச்சத்து மதிப்புகள்:
100 கிராம் முடக்கத்தான் கீரையில் 61 கலோரிகள், 4.7 கிராம் புரதம், 9 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0.6 கிராம் கொழுப்பு உள்ளது.மேலும் தாதுக்கள், இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் அடங்கி உள்ளது.
முடக்கத்தான் கீரை எதற்கெல்லாம் பயன்படுகிறது..?
முடக்கத்தான் கீரையின் பொடி பயன்கள்:
முடக்கத்தான் இலையை காயவைத்து மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இப்பொடியினை தினமும் காலையில் 1/2 ஸ்பூன் எடுத்து வெந்நீரிலோ அல்லது தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் இருக்கும் வலி குறையும்.
கொசுவை விரட்டும் தன்மை உடையது:
முடக்கத்தான் சாற்றை உடலின் கை மற்றும் கால்களில் தேய்த்து கொள்வதன் மூலம் கொசு நம்மை நெருங்காது.
சமையலுக்கு முடக்கத்தான் கீரை:
முடக்கத்தான் கீரையை பயன்படுத்தி, முடக்கத்தான் ரசம், முடக்கத்தான் தோசை, முடக்கத்தான் சூப், முடக்கத்தான் துவையல் போன்ற பலவகையான உணவுகளை செய்யலாம்.
நீங்கள் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுபவர்களா..! அப்போ இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா..? |
பொடுகு பிரச்சனையை தீர்க்கும்:
முடக்கத்தான் இலையை அரைத்து தலைமுடிகளில் அப்ளை செய்து குளித்தால் தலையில் இருக்கும் அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
நோய்களை தீர்க்கும்:
முடக்கத்தான் கீரையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மூட்டு வலி, கீல்வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களுக்கு சிறந்த வீட்டு மருந்தாக பயன்படுகிறது.
மேலும் காது வலி, சளி மற்றும் இருமல், மலச்சிக்கல், மாதவிடாய் காலத்தில் வரும் தசை பிடிப்பு, தோல் பிரச்சனை போன்ற நோய்களையும் தீர்க்கிறது.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |