Nochi Multi Purpose
பொதுவாக நம்முடைய வீட்டிலும் சரி வீட்டிற்கு அருகிலும் சரி நிறைய செடி, கொடி மற்றும் மரங்கள் உள்ளது. அதில் எது நமக்கு தேவையானதாக உள்ளதோ அதில் இருந்து பூ, காய், பழம் மற்றும் இலை என பரித்து உபயோகப்படுத்துகின்றோம். நமக்கு தேவையில்லாததை அப்படியே விட்டு விடுகிறோம். ஆனால் சாதாரணமாக உள்ள ஒவ்வொரு செடியிலும் நிறைய பல்நோக்கு திறன் உள்ளது. அவற்றை பற்றி நமக்கு அவ்வளவாக தெரிவது இல்லை. அதனால் தான் நம்முடைய Multi Purpose பதிவில் தினமும் நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஒவ்வொரு பொருளிலும் உள்ள Multi Purpose பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நொச்சியின் Multi Purpose-ஐ பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ உங்க வீட்ல ஓமவல்லி செடி இருக்கா.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..
நொச்சி செடி:
நொச்சி ஆனது பெரும்பாலும் ஆற்று ஓரங்களில் வளரக்கூடிய ஒரு வகை செடியாகும். இத்தகைய நொச்சி செடியானது 30 அடி வரை உயரமும், பூக்கள் 10 முதல் 20 செமீ வரை நீளமும் கொண்டிருக்கும். இதனையுடைய அறிவியல் பெயர் Vitex Negundo என்பதாகும்.
இந்த நொச்சி லாமியாசியே என்ற குடும்பத்தினை சேர்ந்ததாகும். மேலும் இதனையுடைய தாய் நாடக தென்னாபிரிக்கா மற்றும் ஆசியாவாக கூறப்படுகிறது.
நொச்சி வகைகள்:
- கரு நொச்சி
- நீர் நொச்சி
- நீல நொச்சி
- மயிலடி நொச்சி
- வெண்ணொச்சி
நொச்சி இலை:
நொச்சி இலையில் இருந்து தயாரிக்கப்படும் சாற்றினை நாள்பட்ட புண்களில் இருந்து வெளியே வரும் சீழ் மற்றும் கை, கால்களில் காணப்படும் மூட்டுவலிக்கும் நல்ல தீர்வினை அளிக்கக்கூடியதாக உள்ளது.
மேலும் இது தலைவலி, கீழ் வாதம் போன்றவற்றிற்கும் ஒரு மருந்ததாக பயன்படுத்தப்படுகிறது.
குப்பையில் கிடக்கும் குப்பைமேனியில் இவ்வளவு விஷயம் இருக்கா.. |
நொச்சி பூ பயன்கள்:
- அலர்ஜி
- கால் மற்றும் கைகளில் காணப்படும் வீக்கம்
- ஆஸ்துமா
- வயிற்றுப்போக்கு
- காலரா
- வயிற்று வலி
- கணைய வீக்கம்
நொச்சியில் உள்ள பூவானது மேலே சொல்லப்பட்டுள்ள நோய்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன் அளிக்கக்கூடியதாக உள்ளது.
நொச்சி இலை பொடி:
இத்தகைய நொச்சியில் இருந்து தயாரிக்கக்கூடிய பொடியானது காய்ச்சல், சளி மற்றும் குடலில் காணப்படும் பூச்சிகள் வெளியேற்ற என அனைத்திற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
நொச்சி வேர்:
பசியின்மை, சளி, சிறுநீர் குற்றல் மற்றும் உடலில் ஏற்படும் கட்டிகள் என அனைத்திற்கும் நொச்சி வேரானது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் நொச்சியில் பல வகைகள் இருப்பது போல அது ஒவ்வொன்றும் தனி தனியாக குறிப்பிட்ட நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |