விவசாயிகள் மின் மோட்டார் அமைக்க அரசு வழங்கும் ரூ.10,000 மானியம்!
விவசாய நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.. தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை சார்பில் 2022 – 23-ம் ஆண்டுகளில் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் ஒன்றான விவசாய ஆழ்துளைக் கிணறுகளுக்கான புதிய மின் மோட்டார்களுக்கு வழங்கப்படும் மானிய விவரங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அது குறித்த தகவல்களை நாம் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..
Agriculture Pump Set Subsidy in Tamil
எவ்வளவு மானியம்?
விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க மானியமாக 10,000 ரூபாய் அல்லது மின் மோட்டாரின் மொத்த விலையில் 50 சதவிகிதம். இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 10 குதிரைத்திறன் வரை உள்ள மின் மோட்டார் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளின் மின் மோட்டாருக்கு மாற்றாக, புதிய மின் மோட்டார் வாங்குவதற்கும் இந்த மானியத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்.
யாருக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும்?
- சிறு மற்றும் குறு விவசாயிகள்
- ஆதிதிராவிடர்
- பழங்குடியின விவசாயிகள்
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
விவசாயிகள் நேரடியாக https://mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இல்லையென்றால் வருவாய் கோட்டங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிச் செயற் பொறியாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இணயதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அதிகாரிகள் நேரில் அய்வு செய்த பின் உரிய வழிமுறையின்படி மானியம் பயனாளியின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள்:
- ஆதார் அட்டை நகல்.
- புகைப்படம்.
- வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்.
- சாதிச் சான்றிதழின் நகல் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும்).
- சிறு குறு விவசாயிகான சான்றிதழ் (3 ஏக்கர் வரை நிலம் உள்ளது என வட்டாட்சியர்
- சான்று இணைக்கப்பட வேண்டும்).
- நிலம் சம்பந்தமான சிட்டா மற்றும் அடங்கல்.
- மின் இணைப்புச் சான்றிதழின் நகல்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் உள்ள கிராம விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |