தமிழகத்தில் இன்று சந்திர கிரகணத்தை பார்க்க முடியுமா? எத்தனை மணிக்கு பார்க்கலாம்..!

Advertisement

இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியுமா? | Chandra Kiraganam 2022 Date and Time in Tamil

ஹாய் நண்பர்களே வணக்கம்.. இன்று சந்திர கிரகணம்.. இந்த சந்திர கிரகணம் நமது தமிழ் நாட்டில் தெரியுமா? தெரியாதா? என்ற பல குழப்பங்கள் பலரிடம் இருந்து வருகிறது. அதனை தெரியப்படுத்தவே இந்த பதிவு ஆம் நண்பர்களே இன்று சந்திர கிரகணம் தமிழ் நாட்டில் தெரியுமா? தெரியாதா? என்பதை குறித்து தான் இந்த பதிவு. சரி வாங்க முதலில் இந்த சந்திர கிரகணம் எப்படி தோன்றுகிறது என்பதை பற்றி அறிந்துகொள்வோம்.

சந்திர கிரகணம் எப்படி தோன்றுகிறது?

முழு சந்திரன் நாளில் சூரியன் மற்றும் நிலவு ஆகிய இரண்டிற்கு இடையில் பூமி வருமாம். ஆக சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை மூன்றும் நேர்கோட்டில் இருப்பதைத்தான் சந்திர கிரகணம் என்கின்றன. அதேபோல் முழு சந்திரன், பூமியின் நிழலின் கீழ்ப்பகுதியில் வருவதைத்தான் பகுதி சந்திர கிரகணமும் ஏற்கின்றன. அந்த வகையில் இன்று முழு சந்திரா கிரகணம் நிகழ உள்ளது. சரி வாங்க இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா என்பதை இப்பொழுது அறியலாம்.

இந்தியாவில் சந்திர கிரகணம் இன்று தெரியுமா?

இந்த முழு சந்திர கிரகணம் அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக பார்க்க முடியாது. ஏன் என்றால் இந்த கிரகணம் சந்திரன் உத்தமாவதற்கு முன்னதாவே அனைத்து நிகழ்வுகளும் செயல்பட்டு கொண்டிருக்கும். அதனால் இந்த கிரகணத்தை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பார்க்க வாய்ப்பு இல்லை.

இருப்பினும் முழுமையான மற்றும் பல்வேறு பகுதி வடிவ சந்திர கிரகணத்தின் நிலைகளின் முடிவினை இந்திய நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காண வாய்ப்புகள் இருக்கிறது.

அதாவது சூரியன் இந்தியாவில் சூரியன் மேற்கு திசைக்கு செல்ல செல்ல, இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கு சந்திரன் உதயமாகும் போது தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளுக்கு போக போக இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியுமாம்.

Chandra Kiraganam 2022 Date and Time in Tamil

இந்தியாவில் சந்திர கிரகணம் எங்கு தெரிய வாய்ப்புகள் உள்ளது?

அநேகமாக இந்த கிரகணம் இந்தியாவில் அதிகம் தெரிய வாய்ப்பு குறைவு என்றாலும், இந்தியாவில் கொல்கத்தா, டெல்லி, பாட்னா, சிலிகுரி, ரஞ்சி மற்றும் கவுகாத்தி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் முழு சந்திர கிரகணத்தைக் காணலாம்.

கொல்கத்தாவில் இந்த சந்திர கிரகணம் எப்பொழுது தெரியும் என்றால் சரியாக மாலை 4.52 மணிக்கு தெரியும் என்று சொல்கின்றன. குறிப்பாக கொக்கத்தவில் மேகமூட்டம் இன்றி வானத்தின் வெளிச்சம் குறைய ஆரம்பித்தாள் இந்த சந்திர கிரகணத்தை மாலை 05.11 மணி அளவு வரை இந்த முழுமையான சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.

தமிழ் நாட்டில் இந்த சந்திர கிரகணம் தெரிய வாய்ப்புகள் இருக்கிறதா?

சந்திர கிரகணம் நேரம் – இந்த கேள்விக்கும் பதில் இருக்கிறது. அதாவது தமிழகத்தில் இந்த சந்திர கிரகணம் சென்னையில் இந்தியாவின் நேரத்தின்படி மாலை 5 மணி 39 நிமிடங்கள் ஆரம்பிக்கிறது. சென்னையில் வசிக்கும் மக்கள் இந்த சந்திர கிரகணத்தை 40 நிமிடங்கள் காண முடியும். இந்த சந்திர கிரகணம் இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சந்திர கிரகணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement