Passenger Train Fare Reduction in Tamil
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். பொதுவாக நாம் அனைவருமே பெரும்பாலும் பேருந்து அல்லது ரயில்கலீல் அதிகமாக பயணம் செய்வோம். வேளைக்கு செல்வது, வெளியூர்களுக்கு செல்வது, கல்லூரிக்கு செல்வது உள்ளிட்ட பல தேவைகளுக்காக ரயில் மற்றும் பேருந்துகளை பயன்படுத்தி வருகிறோம். தேவைகள் அதிகமாகும்போது ரயில் மற்றும் பேருந்துகளின் கட்டணமும் அதிகமாக வருகிறது. ஆனால், சமீபத்தில் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் தரும் வகையில் பாசஞ்சர் ரயில்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள ரயில் கட்டணம் இப்போது குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 200 கி.மீ.-க்கு குறையான தொலைவில் செல்லும் ரயில்களில் மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதனை பற்றிய விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
பாசஞ்சர் ரயில்களில் கட்டணம் குறைப்பு:
தெற்கு ரயில்வேயில் 324 குறுகிய தூர பாசஞ்சர் ரயில்களும் சாதாரண கட்டண முறையை நீக்கி விட்டு, விரைவு ரயில் அல்லது சிறப்பு ரயில்களின் கட்டணத்தில் இயக்கப்பட்டது. இதனால், குறைந்தபட்ச கட்டணமே ரூ.30 இருந்தது. இதனால் பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், குறுகிய தூரம் இயக்கப்பட்டு வரும் சாதாரண பாசஞ்சர்ரயிலின் கட்டணம் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறுகிய துார பாசஞ்சர் ரயில்களில் சாதாரண கட்டண முறை உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
பாசஞ்சர் ரயில்களில் குறைந்த பட்சக் கட்டணம் ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளாக குறைக்கப்படாத கட்டணம், தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் குறைக்கப்பட்டு வருகிறது.
EB தொடர்பான புகார்களை வீட்டிலிருந்தே தெரிவிக்கலாம்.. மின்வாரியத்தின் புதிய அறிவிப்பு!
பாசஞ்சர் ரயில்களில் குறைக்கட்டப்பட்ட கட்டணம்:
கோவை – ஈரோடு:
கோவையிலிருந்து ஈரோடு செல்லும், பாசஞ்சர் ரயில்களில் முன்னதாக குறைந்தப்பட்ட கட்டணமாக ரூ. 50 இருந்த நிலையில் தற்போது 25 ரூபாய் குறைக்கப்பட்டு குறைந்தட்டப்பட்ட கட்டணமாக ரூ.25 ஆக உள்ளது.
ஈரோடு – சேலம்:
ஈரோடுலிருந்து சேலத்துக்கு செல்லும் பாசஞ்சர் ரயில்களில் முன்னதாக குறைந்தப்பட்ட கட்டணமாக ரூ.40 இருந்த நிலையில் தற்போது 25 ரூபாய் குறைக்கப்பட்டு குறைந்தட்டப்பட்ட கட்டணமாக ரூ.15 ஆக உள்ளது.
சென்னை – திருப்பதி :
சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் பாசஞ்சர் ரயில்களில் முன்னதாக குறைந்தப்பட்ட கட்டணமாக ரூ.70ஆக இருந்த நிலையில் தற்போது 35 ரூபாய் குறைக்கப்பட்டு குறைந்தட்டப்பட்ட கட்டணமாக ரூ.35 ஆக உள்ளது.
தஞ்சை:
ஊர் | பழைய கட்டணம் | புதிய கட்டணம் |
தஞ்சை – திருச்சி | ரூ.30 | ரூ.15 |
தஞ்சை – நீடாமங்கலம் | ரூ.30 | ரூ.10 |
தஞ்சை – கும்பகோணம் | ரூ.30 | ரூ.10 |
தஞ்சை – மயிலாடுதுறை | ரூ.45 | ரூ.20 |
தஞ்சை – திருவாரூர் | ரூ.35 | ரூ.15 |
தஞ்சை – நாகை | ரூ.45 | ரூ.20 |
தஞ்சை – காரைக்கால் | ரூ.50 | ரூ.25 |
தஞ்சை – பூதலூர் | ரூ.30 | ரூ.10 |
தஞ்சை – திருவெறும்பூர் | ரூ.30 | ரூ.15 |
தஞ்சை – பாபநாசம் | ரூ.30 | ரூ.10 |
குறைக்கப்பட்ட மதுரை ரயில் கட்டணம் 2024
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |