Ration Card Latest News in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள செய்திகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். குடும்ப அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே இதனை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் ரேஷன் கார்டு பற்றிய அருமையான செய்தியினை உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி அவர்கள் சட்டசபையில் தெரிவித்தார். ஓகே வாருங்கள் நண்பர்களே அந்த நியூஸ் என்னவென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
புதிய ரேஷன் கார்டு:
புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு மக்கள் இனிமேல் வட்டாச்சியர் அலுவலகத்திற்கோ அல்லது இடைத்தரகர்களையோ அணுக வேண்டாம். ஏனென்றால் புதிய ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு நகலை ஆன்லைன் மூலம் பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆன்லைனில் குறைந்த அளவு கட்டணத்தில் விண்ணப்பித்தால் போதும் ரேஷன் கார்டு அவர்கள் வீட்டுக்கே வந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அரசு பொதுமக்களுக்கு அறிவித்துள்ள குட் நியூஸ் இதில் உங்களுக்கு என்ன லாபம் தெரியுமா
செறிவூட்டப்பட்ட அரிசி:
இரத்த சோகை உள்ளவர்களின் ஆரோக்கியத்திற்காக வைட்டமின், இரும்புச்சத்து மற்றும் நுண்ணூட்ட சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசியை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசியை அரவை ஆலைகளில் தயாரிப்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். எனவே வரும் ஜீன் மாதம் வரை மத்திய அரசிடம் காலா அவகாசம் கேட்டுள்ளோம் என்றும் அமைச்சர் ஆர். சக்கரபாணி கூறியுள்ளார். மேலும் இந்த அரிசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நியாய விலை கடை:
டெல்டா மாவட்டங்களில் 65 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்குகள் ரூ.45 கோடி செலவில் அமைக்கப்படும் என்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
ரயில் பயணிகளுக்கு இனி இதுவும் இலவசமாம்…! என்னங்க சொல்றீங்க அப்புடியா..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |