உஜ்ஜாவாலா திட்டம் 2023
வீட்டு கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து கொண்டே வருகின்றது. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வந்தால் என்ன செய்வது என்று மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனை கருத்தில் மத்திய அரசு மானியம் வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதனை பற்றிய தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க..
கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம்:
பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் பின் உஜ்வாலா திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக 12 கோடி பெண்கள் இலவசமாக எரிவாயுவை பெற்றுகின்றனர். இதற்கு ஆரம்பத்தில் மானியம் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா கால கட்டத்தில் நிதிநிலமை காரணமாக மத்திய அரசு தற்காலிகமாக மானியத்தை நிறுத்தி வைத்திருந்தது. இதற்கு மீண்டும் மானியம் 200 ரூபாய் வழங்கலாம் என்று அரசு முடிவெடுத்துள்ளது.
கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக 351 ரூபாய் அதிகரிப்பு..! அதிர்ச்சியில் மக்கள்..!
ujjwala திட்டத்தின் கீழ் வாங்கிய கேஸ் சிலிண்டர்களை ரீஃபில் செய்து பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பெண்கள் 90 லட்சம் நபர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு மீண்டும் அதனை பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசுக்கு தகவல்கள் வந்துள்ளது.
ரேஷன் அட்டை பொறுத்தவரை Phh, Phhay,Nph போன்ற மூன்று குறியீடு உள்ளவர்களுக்கு மட்டுமே 200 ரூபாய் மானியம் வழங்க உள்ளதாக முடிவெடுத்துள்ளது. விரைவில் இதற்கான பட்டியல் தயாரித்து வங்கி கணக்கில் மானியம் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய இத்தனை வழி இருக்கா!! இது தெரியாம போச்சே..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |