சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
நாம் அனைவரும் பெரும்பாலும் அதிகமாக சமையலுக்கு விறகு அடுப்பினை பயன்படுத்துவது இல்லை. அதற்கு மாறாக அனைவரும் கேஸ் அடுப்பினை தான் பயன்படுத்து வருகிறோம். மாதம் மாதம் நாம் எந்த பொருட்களை வாங்குகிறோமோ இல்லையே சமையலுக்கு கேஸ் சிலிண்டர் வாங்கி விடுவோம். ஆனால் இந்த கேஸ் சிலிண்டரின் விலையினை நாம் எப்போதும் சொல்லவே முடியாது. ஏனென்றல் நம்முடைய வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டரின் விலையினை எண்ணெய் நிறுவனங்கள் தான் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் இந்த மார்ச் மாதமும் கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த கேஸ் சிலிண்டரின் விலை வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை என்று முற்றிலும் வேறுபட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்⇒ யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 உரிமை தொகை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தெரியுமா..?
சமையல் கேஸ் சிலிண்டர் விலை:
கடந்த பிப்ரவரி மாதம் வரை வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 1068 என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பால் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலையை அடிக்கடி அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகரித்து இனி 1,118 ரூபாய் என விற்பனை ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை:
அதேபோல கடந்த பிப்ரவரி மாதம் வரை வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை 1,917 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இனி மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை 351 ரூபாய் அதிகரித்து இனி 2,268 ரூபாய் என விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுளளது.
திடீரென இப்படி கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்து இருப்பது மக்களிடேயே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் பாடியுங்கள்⇒ (01.03.2023)தங்கம் விலை சரமாரியாக உயர்ந்து வருகிறது..! சவரனுக்கு ரூபாய் 2,00/- மேல் உயர்வா..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |