யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 உரிமை தொகை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தெரியுமா..?

monthly 1000 for ration card in tamilnadu eligibility tamil

Monthly 1000 For Ration Card in Tamilnadu Eligibility

தமிழக அரசு மக்களின் நலன் கருதி நிறைய வகையான திட்டங்களை கொண்டுவந்து அவர்களை பயன் அடையச் செய்துள்ளது. அந்த வகையில் இப்போது பெரும்பாலும் மக்களால் வரவேற்கப்படும் ஒரு திட்டம் என்றால் அது தமிழக அரசு (ஆளும் திமுக அரசு ) தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை தான். இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் வரும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார். இது போன்ற அறிவிப்பு வெளிவந்திருந்தாலும் கூட மக்கள் அனைவரும் இந்த தொகை யாருக்கு கிடைக்கும் மற்றும் யாருக்கு கிடைக்காது என்று ஒரு பெரிய குழப்பத்துடன் இருக்கின்றனர். ஆகவே உங்களுடைய குழப்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவில் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை யாருக்கு எதன் அடிப்படையில் கிடைக்கும் என்று இந்த செய்தியின் மூலம் தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்தலாம் வாருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – ஜூன் 3-ம் தேதி முதல் அமல்? மகிழ்ச்சியில் மக்கள்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் வீட்டுக்கு ஒரு ரேஷன் கார்டு இருக்கிறது. அந்த கார்டினை பயன்படுத்தி மாதம் ரேஷன் கடையில் குறிப்பிட்ட பொருட்களை மாதந்தோறும் பெற்று வருகிறோம்.

ரேஷன் கார்டை பயன்படுத்தி ரேஷன் மாத பொருட்கள் வாங்குவது மட்டும் இல்லாமல் மற்ற சில தேவைக்காகவும் பயன்படுத்தி வருகிறோம்.

அதுபோல ரேஷன் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாகவும் இருந்து வருகிறது. ஆதார் அட்டை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ரேஷன் கார்டும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இத்தகைய நடைமுறை வாழ்க்கையில் தமிழக அரசு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை என்ற ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கும் வரவுள்ளது.

இதையும் படியுங்கள்⇒ விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. உரம் விலை குறைப்பு..!

ஆனால் இந்த திட்டத்தின் கீழ் யார் பயன்பெறலாம் என்றால் உங்களுடைய ரேஷன் கார்டில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S மற்றும் NPHH-NC என்ற 5 குறியீடுகளில் ஏதேனும் ஒரு குறியீடு கட்டாயமாக இருக்கும். அந்த குறியீட்டின் அடிப்படையில் தான் ரேஷன் கடையில் மாத பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரேஷன் கார்டில் PHH, PHH-AAY மற்றும் NPHH இத்தகைய மூன்று குறியீடுகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அந்த ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்.

அதே ரேஷன் கார்டில் NPHH-S மற்றும் NPHH-NC ஆகிய 2 குறியீடுகளில் ஏதாவது ஒன்று இருந்தாலோ அல்லது ஆண்கள் பெயரில் ரேஷன் கார்டு இருந்தாலோ அந்த நபருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படாது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல்.

மேலும் ஒவ்வொரு அட்டைதாரரின் ஆண்டுவருமானமும் கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய திட்டம் அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. கூடிய விரைவில் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil