ஜூன் மூன்று முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..!

Advertisement

ஜூன் மூன்று முதல் அமலுக்கு வரலாம்! குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை மாதம் ரூ.1000..! Monthly 1000 Rs for Ration Card Holders..!

Monthly 1000 Rs for Ration Card Holders – தமிழ்நாட்டில் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் எப்பொழுது செயல்பாட்டிற்கு வரும் என்று மக்களிடையே பெரும் கேள்விகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிக்கான உரிமை தொகையான ரூபாய் 1000/- வருகின்ற ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை இன்றைய பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை:

மகளிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பலவகையான திட்டங்களை செயல்படுத்துகிறது. இவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

அதன் வரிசையில் தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு உதவும் நோக்கோடு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இந்த நிலையில் அரசு 2023 – 2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. இதில் உரிமைத்தொகை குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜூன் 3 அமலுக்கு வரலாம்!

இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமை தொகை திட்டத்தை வருகின்ற ஜூன் 3-ம் தேதி தொடங்க திட்டம்திட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் எவரெல்லாம் இந்த உரிமை தொகையை பெற முடியாது. யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெற முடியாது என்று கூறப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 உரிமை தொகை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தெரியுமா..?

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement