அப்பா மகள் கவிதை
இந்த உலககத்தில் பிறந்த அனைத்து உயிர்க்கும் அம்மா அப்பா என்றால் பிடிக்கும். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லமால் பிள்ளகளின் மீது உண்மையான அன்பை காட்டுபவர்கள். மேலும் தான் பட்ட கஷ்டத்தை த்ன் பிள்ளைகள் பட கூடாது என்று நினைப்பவர்கள். அப்பா என்பவர் அவருடைய பாசத்தை கோபத்திலும், கண்டிப்பிலும் தான் காட்டுவார்கள். இந்த கோபமும், கண்டிப்பும் கூட நாம் வளர வேண்டும் என்பதற்காக தான். இது அவர் போடும் வேஷம் மட்டுமே. நாள் முழுவதும் உழைத்து கொண்டு வீட்டிற்கு வந்து வேலையினால் வந்த உடல் வலியை காட்டாமல் தன் குழந்தைக்குயானை சவாரி காட்டுபவர் அப்பா.
அப்பாவின் அன்பையும், பாசத்தையும் வார்த்தைகளால் சொல்ல இந்த ஜென்மம் போதாது. அதனால் நாம் இந்த உலகில் இருக்கும் வரை நம் பெற்றோரை குழந்தை போல் பார்த்து கொள்ள வேண்டும் கடைசி காலம் வரை. இந்த பதிவில் அப்பா மகள் கவிதை வரிகளை அறிந்து கொள்வோம்.
Magalgal thina valthukal :
என் அதிகாரம் எல்லாம் அணு அணுவாய் சிதைந்தது
உன் ஆசை குரலை கேட்டு

Magalgal thinam :
உன் புன்னகை
என் புண் பட்ட இதயத்திற்கு போட்டது ஒரு புதிய மருந்து
Magalgal thina valthu :
என் தாய் எனக்கு குழந்தை ஆனதும்
என் தாய்க்கு நான் தகப்பான் ஆனதும் உன்னாலே தான்.
Magalgal thina wishes :
உன் அழுகையின் சத்தம் கேட்டு
என் ஆணவ சத்தமெல்லாம் போனது என்னை விட்டு
Magalagal quotes :
அப்பா சொல்லும் அத்தனை உண்மைகளையும் ஆர்வமாய் கேட்கின்ற மகள்கள் ஒருவித அழகு.

அப்பா மகள் கவிதை வரிகள்:
என் மகனின் உறவு அவனின் மனைவி வரும் வரை
என் மகளின் உறவு என் ஆயுள் உள்ளவரை

Appa Magal Kavithai in Tamil Lyrics:
என் சுட்டு விரல்
உன் ஐந்து விரல்களுக்கு நடுவே சிக்கி கொண்ட பொழுது,
என் தந்தையை
நான் உணர்ந்தேன் அப்பொழுது
அன்பு மகளே
அடிமையானேன் உனக்கு
என் அகங்காரம் எல்லாம் அடியோடு அழிந்தது
உன் அன்புக்கு.
ஆயுதங்கள் ஆயிரம் இருந்தும்
உன்னிடம் தோற்றேன் உன் சிறு புன்னகைக்கு
Appa Magal Kavithai:
பெண் வைக்கும் அன்பில் ஏமாற்றத்தை அளிக்காத ஒரே ஆண் அப்பா மட்டுமே

Appa Magal Kavithai:
தந்தைக்கு தன் மகள் எப்போதுமே இளவரசி தான்

Appa Magal Quotes in Tamil:
பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்கள் அதிஷ்டசாலிகள் ஏனென்றால் அவர்களுக்கு மட்டுமே இரண்டு தாய்

Appa Magal Quotes in Tamil:
எத்தனை வயதானாலும் பெண் பிள்ளைகளை என்றும் தன் செல்வங்களாக கொண்டாடுவது அவளது அப்பாக்கள் மட்டுமே

Appa Ponnu Kavithai in Tamil Lyrics:
அப்பாவை பெயர் சொல்லிக்கூப்பிடும் மகள்கள் ஒருவித அழகு.
மகளை தன் அம்மாவாக பார்க்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்கு மேக்கப் போட்டு ரசிக்கும் மகள்கள் ஒருவித அழகு.
மகளுக்கு தன் கையால் உணவூட்டி மகிழும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவின் கழுத்தில் தொங்கி விளையாடும் மகள்கள் ஒருவித அழகு.
மகளின் கால்களில் கொஞ்சி விளையாடும் அப்பாக்கள் அதைவிட அழகு.
மகள் சொல்லும் அத்தனை பொய்களையும் சிரிக்காமல் ரசிக்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு.
| இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |

















