ஜல்லிக்கட்டு கவிதை | Jallikattu Quotes In Tamil

Advertisement

ஜல்லிக்கட்டு கவிதைகள்

தமிழர்கள் வீர விளையாட்டுக்களின் மூலம் தங்களது வீரத்தினை வெளிப்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாக ஜல்லிக்கட்டு காணப்படுகின்றது. ஜல்லிக்கட்டானது ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகின்றது. தமிழகத்தின் பல இடங்களிலும் இவ்விளையாட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

குறிப்பக இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் நடைபெறுகிறது. சரி இந்த ஜல்லிக்கட்டு பற்றிய சில கவிதைகளை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

ஜல்லிக்கட்டு கவிதை:

 Jallikattu Quotes In Tamil

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில பொட்டுவெச்சு
காள மாட்ட எங்ககூட
உடல் வெச்சு ஆடுவோம்!
வருஷம் ஆனாலும்
மனுஷன் போனாலும்
ஜல்லிக்கட்டு எங்க உசுரு!

ஜல்லிக்கட்டு கவிதைகள்:

 

வாடிவாசல் புறப்படும்
கொம்பு சீவிய
குடிகார காளையை
வால்பிடித்தோ இல்லை திமில்பிடித்தோ
தூக்கியெறியப்படும் வேளைகளில்
பரணிலிருக்கும் காளைக்காரனின்
வெடிச்சிரிப்பிலும் மீசை முறுக்களிலும்
வெளிப்படும் அவன் வெற்றி…

Jallikattu Quotes In Tamil:

Jallikattu Kavithai

கொம்பு தீட்டிய காளை..
சீறிவரும் வேளை..
புழுதி பறக்கும் திடல் அது..
திமிலைப் பிடிக்கும் திறனங்கு
யாருக்கும் உண்டென்று சொல்லடா?

Jallikattu Kavithai:

Jallikattu Quotes In Tamil

உன் திறமையை
ஏளனமாக
அடக்கும்
தீயோர் முன்..
திமிலுடன்
சீறி பாயும்
ஜல்லிக்கட்டு காளையாக
மீண்டும் எழு..

ஜல்லிக்கட்டு கவிதை:

Jallikattu Kavithai

மல்லுகட்டத்
துணிந்தவனுக்கு – அது
ஜல்லிக்கட்டு!
அஞ்சாநெஞ்சம்
கொண்டவர்க்கு – அது
மஞ்சு விரட்டு!
வீறுநடை போடும்
தமிழர்களுக்கோ – அது
ஏறு தழுவுதல்!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜல்லிக்கட்டின் விதிமுறைகள் இதுதானா?

மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Wishes in Tamil
Advertisement