Love Kavithai Tamil Lyrics
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிருக்கும் அன்பு என்பது இயல்பானது. இந்த அன்பை பெற வேண்டும் என்று நினைப்போம், மற்றொன்று கொடுக்கவும் நினைப்போம். ஆனால் இந்த அன்பினை நாம் யார் மீது வேண்டுமானலும் வைப்போம். அம்மா, அப்பா மீது பாசத்தை வைத்தால் அன்பூ என்று சொல்கிறோம், நண்பர்கள் மீது வைத்தால் நட்பு என்று கூறுகிறோம்.
இருப்பினும் ஒருவர் மீது உண்மையான காதலை வைத்திருப்பவர்களுக்கு அது உயிரானது. அதனை பொய்யாக நினைப்பவர்களுக்கு அது என்றும் பொய்யானது. வாழ்வில் தோன்றும் உணர்வுகள் பல விதம் என்றாலும் இந்த காதல் மட்டும் வாழ்க்கையின் உயிரில் கலக்கும் ஒரு விதமான அதிசய உணர்வு. நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர என்றும் குறையாது. அதனால் தான் இந்த பதிவில் காதல் பற்றிய வரிகளை அறிந்து கொள்வோம்.
காதல் கவிதை வரிகள்:
காலம் சென்றாலும்,
கனவுகள் மறைந்தாலும்,
கவிதைகள் அழிந்தாலும்,
என் உயிர் பிரிந்தாலும்,
காற்றோடு தொடர்ந்து வருவேன்,
உன் காதல் என்னும் அன்புக்காக.
நான் அதிகமாக கோவப்படுவேன்
Daily உன் கூட சண்டை போடுவேன்
ஆனால் ஒரு போதும் உன் கூட
பேசாமல் இருக்க மாட்டேன்..
நீ வெண்ணிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ
காதல் கவிதை வரிகள் தமிழ் கவிதைகள்:
எத்தனை வேலைகள் இருந்தாலும்
என் அலைபேசி அதிர்ந்ததும்
நீயாக இருக்கும் என்று எண்ணி
தானாக ஓடும் என் கால்கள்
மௌனமும்
பேசுமென்று
உணர்ந்தேன்
உன்னருகில்
விட்டு பிரியும்
தருணத்தில்
மொத்த காதலையும்
கொட்டுகிறேன்
உன் கரத்தினுள்
என் கையை
பற்றிக்கொள்ளேன்
என்று
கவிதை எழுத காதல் தேவையில்லை…..
பெண்களின் அழகை
ரசிக்க தெரிந்தாலே போதும்…….!!!!
எத்தனை முறை யோசித்தாலும்
ஞாபகத்திற்கு வர மறுக்கிறது
உன் மேல் காதல் பிறந்த
அந்த அழகிய வினாடி
பெண் காதல் கவிதை வரிகள்:
பெண்ணே உன் விழிகள் பேசும்
மொழியின் அர்த்தம் புரியாமல்
தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்
அதற்கான அகராதியையும்
நீயே எழுதிவிடு உன் கரு விழிகளால்
உன்னை நினைக்காமல்
உறங்கிய நாட்களை விட
உன்னை நினைத்து
உறங்காத நாட்களே அதிகம்
விழிகளில் வெளிச்சமும் எனக்காக
செவிகளின் ஓசையும் எனக்காக
உதடுகளின் வார்த்தையும் எனக்காக
கைகள் ஓய்வதும் எனக்காக
கால்கள் தேய்வதும் எனக்காக
பின் ஏன் என் இதயம் மட்டும்
துடிக்கிறது உனக்காக
உன்னை நினைத்தபடியே
உறங்குகிறேன் நான் இரவில்
உறக்கம் நிரந்தரமானால்
இதயம் கடைசியாக நினைப்பது
நீயாக இருக்கட்டும்
அழகான கவிதை வரிகள்:
காதல் என்ற கடலில் மூழ்கினேன்
என் முத்தாகிய உன்னை எடுக்க
உன் அன்பின் ஆழம் அதிகரிக்க
மூழ்கிக் கொண்டே இருக்கிறேன்
நீயோ கடமை என்னும் சிப்பிக்குள்
நானோ காதல் என்னும் கடலுக்குள்
நீயும் விடுவதாய் இல்லை
நானும் எழுவதாய் இல்லை
விடுதலையில்லா
சட்டம் வேண்டும்
உன் காதல் பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க
பெண்ணே நீயோ எனை
நேசிக்கவே யோசிக்கிறாய்
ஆனால் நானோ உனை
நேசிக்கவே யாசிக்கிறேன்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |