How to Make Biriyani Tea in Tamil
சராசரி மனிதர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் ஆற்றல் மிக்க தேநீரைப் அருந்துவதன் மூலம் காலை, மாலை, பகல் அல்லது இரவில் அவர்களால் புத்துணர்ச்சியுடன் இருக்க முடிகிறது. உண்மையில், கிராமத்திலிருந்து வேலை தேடி நகரத்திற்குச் செல்லும் பல இளைஞர்களுக்கு, தேநீர் ஒரு வேளை உணவாகவே இருக்கின்றது. சிலருக்கு டீ அருந்தவில்லை என்றால் அந்த நாட்களே ஓடாது. சிலர் கணக்கில்லாமல் டீ அருந்துவார்கள். என்னதான் தேநீர் உங்களுக்கு மோசமானது மற்றும் அதை உட்கொள்ளக்கூடாது என்று பலர் கூறினாலும், பெரும்பாலான மக்கள் அது இல்லாமல் வாழ முடியாது என்று இருக்கின்றார்கள்.
பலருக்கு, குறிப்பாக தேநீர் ஒரு முக்கிய உணவு. பணிச்சுமை, மன அழுத்தம் மற்றும் வேலை செய்யும் போது தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை தடுக்க மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத தேநீரை உட்கொள்ளுமாறு மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நமது உடம்புக்கு தேவையான சக்தியையும் உற்சாகத்தையும் தரும் ஒரு புதுவிதமான டீ-ஐ பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். அது என்ன டீ என்றால் பிரியாணி டீ.