சிக்கன் சூப் இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் செமையா இருக்கும்..!

how to make chicken soup at home in tamil

Tasty Chicken Soup Recipes in Tamil

சிக்கன் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அதிலும் சிக்கனில் சூப் செய்து கொடுத்தால் போதும் சுவைத்து சுவைத்து சாப்பிடுவோம். அவ்வளவு சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது சிக்கன் சூப். நமக்கு சிக்கன் சூப் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தால் உடனே ஹோட்டலுக்கு சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் வீட்டிலேயும் சூப்பராக சிக்கன் சூப் செய்யலாம். எனவே இப்பதிவில் வீட்டிலேயே சவுத் இந்தியன் ஸ்டைலில் சுவையான சிக்கன் சூப் செய்வது எப்படி என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

Homemade Chicken Soup Recipe in Tamil:

 சிக்கன் சூப் எப்படி செய்வது

தேவையான பொருட்கள்:

  • எலும்புள்ள சிக்கன்- 500 கிராம்
  • முழு தனியா- 2 டீஸ்பூன்
  • சீரகம்- 1 டீஸ்பூன்
  • மிளகு- 1 டீஸ்பூன்
  • இஞ்சி- 1 துண்டு
  • பூண்டு- 8 பற்கள்
  • எண்ணெய்- 3 ஸ்பூன்
  • பட்டை- 1 துண்டு
  • கிராம்பு- 2
  • ஏலக்காய்- 2
  • பிரியாணி இலை- 1
  • வெங்காயம்- 1 பெரியது
  • பச்சை மிளகாய்- 1
  • கருவேப்பிலை- 2 கொத்து 
  • தக்காளி- 2
  • மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை- சிறிதளவு 

சிக்கன் சூப் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா

சிக்கன் சூப் செய்யும் முறை:

ஸ்டேப் -1

முதலில் தனியா, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை கொரகொரப்பாக இடித்து எடுத்து கொள்ளுங்கள். அடுத்து, இஞ்சி மற்றும் பூண்டினையும் பேஸ்ட் செய்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

இப்போது, அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து கொள்ளுங்கள்.

 tasty chicken soup recipes in tamil

ஸ்டேப் -3

பிறகு, இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் -4

வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் இஞ்சு பூண்டு விழுதுகளை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் -5

பிறகு, இதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். இந்நிலையில் சிக்கனை சேர்த்து, அதில் இடித்து வைத்த தனியா, மிளகு, சீராக பொடிகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.

 homemade chicken soup recipe in tamil

ஸ்டேப் -6

இதனை 2 நிமிடம் அப்படியே வைத்து, பிறகு அதில் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 1/2 மணி நேரம் வரை சிக்கனை வேக விட்டு தண்ணீரை கொதிக்க விடுங்கள்.

சிக்கன் மட்டன் வாங்கினால் இப்படி வாங்குங்க அப்போ தான் ருசியா இருக்கும்..

ஸ்டேப் -7

சூப் நன்றாக கொதித்த பிறகு, அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் சூப் தயார்.!

 best chicken soup recipes in tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil