Garlic Rasam Recipe Without Tomato
அனைவரது வீட்டிலும் ரசம் முக்கியமான இருக்கிறது. என்ன வகையான உணவுகள் செய்தாலும் கூடுதலாக ரசமும் செய்வார்கள். அதாவது எந்தவொரு சமையலும் ரசம் இல்லாமல் நிறைவு பெறாது. உண்ட உணவு செரிப்பதற்காகவும், சளி இருமல் நீங்கவும் ரசத்தை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். ரசத்தில் பல வகையான ரசங்கள் உள்ளது. வீட்டில் தக்காளி இல்லையென்றால் சிலர் ரசம் வைக்க மாட்டார்கள். ஆனால் தக்காளி இல்லாமலும் ரசம் வைக்கலாம். அதனை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Make Rasam Without Tomato in Tamil:
தேவையான பொருட்கள்:
- புளி- நெல்லிக்காய் அளவு
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி- 1 ஸ்பூன்
- பூண்டு- 7 பற்கள்
- கருவேப்பிலை- 2 கொத்து
- பட்ட மிளகாய்- 3
- பெருங்காயத்தூள்- 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- கடுகு- 1/2 ஸ்பூன்
- வெந்தயம்- 1/4 ஸ்பூன்
- நாட்டு சர்க்கரை- 1/4 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி.?
தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி.?
ஸ்டேப் -1
முதலில் நெல்லிக்காய் அளவில் புளியை எடுத்து ஊறவைத்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பிறகு, ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். அதில் சீரகம், மிளகு, கொத்தமல்லி, பூண்டு, பட்ட மிளகாய், பெருங்காய தூள் மற்றும் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
இப்போது, புளி கரைசலில் மஞ்சள் தூள், அரைத்து வைத்த மசாலா பொருட்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றக கலந்து 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
ஸ்டேப் -4
அதன் பின், அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில், கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிய விடுங்கள். பிறகு 1 கொத்து கருவேப்பிலை மற்றும் 2 பட்டமிளகாய் சேர்த்து தாளியுங்கள்.
ஐயர் வீட்டு பருப்பு ரசம் இப்படி வச்சா தான் சுவையும், வாசனையும் தூக்கலா இருக்கும்….
ஸ்டேப் -5
இந்நிலையில், தயார் செய்து வைத்துள்ள ரசத்தை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு, இதில் நாட்டு சர்க்கரை மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி, ரசம் கொதித்து வரும் நிலையில் இறக்கினால் தக்காளி இல்லாத ரசம் தயார்.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |