MLA Salary in Tamilnadu Tamil
பொதுநலம். காம் பதிவை படித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நம்முடைய பதிவில் ஒவ்வொரு வகையான அதிகாரிகளின் சம்பளம் பற்றி படித்து இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்றைய பதிவில் தமிழ்நாடு MLA-களின் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி தெரிந்து கொள்ளபோகிறோம். பொதுவாக ஒருவருடைய சம்பளத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கு யாராக இருந்தாலும் அதிக ஆர்வம் இருக்கும். நாம் அந்த பதவிக்கு வருகிறோமோ இல்லையோ ஆனால் சம்பளம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நினைப்பீர்கள். சரி நண்பர்களே வாருங்கள் இன்றைய பதிவில் MLA-களின் சம்பளம் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு MLA-களின் சம்பள விவரம்:
தமிழ்நாடு MLA-களின் சம்பளமானது Rs. 55,000 முதல் Rs. 1,05,000 வரை அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தனித்தனி பகுதி வாரியாக பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
MLA-களுக்கு Compensation Amount Rs. 7,000 முதல் Rs. 50,000 வரை மற்றும் Telephone Allowance Rs. 7,000 முதல் 10,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
Batch Payment Rs. 10,000 முதல் Rs,. 25,000 வரை சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது.
Combined Payment Rs. 2,500 முதல் Rs. 5,000 வரை MLA-களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
Vehicle Allowance Rs. 20,000 முதல் Rs. 25,000 வரை மற்றும் Postage Allowance Rs. 2,500 வரை சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர் பணிகள்:
சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவருடைய தொகுதிக்கு தேவையான சலுகைகளை மக்களுக்கு செய்ய வேண்டும்.
அந்த தொகுதிக்கு பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, நூலகம், ஊராட்சியை பராமரித்தல் ஆகியவற்றை திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு செய்து பராமரித்தல்.
பாலங்கள், இடுகாடு, சுடுகாடு போன்றனவற்றை பழுது இல்லாமல் தரமான முறையில் புதுப்பித்தல்.
மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் இரண்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்து சுற்று சுவர் அமைத்து கொடுத்தல்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மாதாந்திர ஊதியம் மற்றும் அவர்களுக்கான வாகனங்கள் இவற்றையும் அமைத்து கொடுக்கும் பொறுப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது.
மழைக்காலத்தில் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க சாலையை பராமரித்தல்.
மாதந்திரோம் மக்களுக்கு பொருட்கள் வழங்கும் அங்காடி போன்றவற்றை சீர் செய்து கொடுத்தால்.
பேருந்து வசதி இல்லாத கிராம புறங்களில் மக்களுக்கு பேருந்து வசதி அமைத்து கொடுத்தல்.
மேலே சொல்லப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல் மக்களின் குறைகளை கேட்டு அதனை பூர்த்தி செய்யும் பணியும் MLA-களுக்கு இருக்கிறது.
இதையும் படியுங்கள்⇒ Salary and Promotion Details in Tamil
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |