SBI வங்கியில் PO ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் இவ்வளவு தானா..?

Advertisement

SBI PO Salary in Tamil

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். சரி பொதுவாக நம் அனைவருக்குமே அதிக சம்பளத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். காரணம் இப்போது பணம் இருந்தால் மட்டும் தான் உயிர் வாழவே முடியும் என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் தான் நாம் பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கின்றோம். சரி நம் அனைவருக்குமே அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதாவது வங்கிகள் போன்ற துறைகளை சொல்கின்றேன். பொதுவாக நம் அனைவருக்கும் இருக்கும் எண்ணம் என்னவென்றால், வங்கிகளில் பணிபுரிபவர்கள் அதிக சம்பளத்தை பெறுகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர்களின் உண்மையான சம்பளம் என்னவென்று யாரும் தெரிந்து கொண்டதில்லை. அதனால் தான் நம் பதிவின் மூலம் தினமும் ஒரு துறையில் பணிபுரிபவரின் மாத சம்பளத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில், இன்று நாம் SBI வங்கியில் PO ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க.

SBI வங்கியில் Clerk ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் இவ்வளவா..

SBI வங்கியில் PO ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு..? 

 sbi po salary

வங்கிப் பணியை விரும்புவோருக்கு, SBI PO துறை ஒரு சிறந்த பணியாக இருக்கும். SBI PO என்பது Probationary Officer என்று சொல்லப்படுகிறது.

SBI PO அறிவிப்பு 2024 செப்டம்பர் இல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன், விண்ணப்பப் படிவம் வெளியிடப்படும். SBI PO 2024-க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க உங்களுக்கு 3 வாரங்கள் கிடைக்கும். SBI PO பதவிகளுக்கு தகுதி பெற, நீங்கள் பட்டதாரி மற்றும் 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் தேர்வு தேதிகள், தகுதி, பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள், கட்டணம் மற்றும் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் போன்ற விவரங்களை அதன் அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

RBI Grade B – ஆபீஸருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..

SBI PO Eligibility 2024:

  • விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக் குறைவாக இருக்கக்கூடாது மற்றும் 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.
  • விண்ணப்பதாரர்களுக்கான SBI PO தகுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

SBI PO Salary 2024:

SBI PO பதவியில் பணிபுரியும் நபருக்கு தொடக்கத்தில் 41,960 ருரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும்,

Period Increment (In INR) Basic Salary (In INR)
First 7 years 1490 36,000
Next 2 years 1740 46,430
Another 7 years 1990 63,840
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement