ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெரும் அஞ்சலகத்தின் அசத்தலான திட்டம்..!

Advertisement

அஞ்சல் அலுவலகத் திட்டம்..! – Gram Suraksha Yojana Post Office Scheme in Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்தியாவில் நிறைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இருப்பினும் மக்கள் நம்பிக்கையுடன் சேரும் சேமிப்பு திட்டம் தான் அஞ்சலக சேமிப்பு திட்டம். அஞ்சல் அலுவலகத்தில் நிறைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் போஸ்ட் ஆஃபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா இது ஒரு பாலிசி திட்டமாகும். இந்த திட்டத்தில் நாம் மாதம் மாதம் வெறும் 50 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.35 லட்சம் வரை வருமானத்தைப் பெறலாம். இந்த அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம். ஆகவே இந்த பயனுள்ள தகவலை முழுமையாக படியுங்கள்.

போஸ்ட் ஆஃபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா:

போஸ்ட் ஆபிஸ் கிராம் சுரக்ஷா யோஜனா என்பது ஒரு முழு ஆயுள் காப்பீட்டுக் திட்டமாகும், இது ஐந்து வருட பாதுகாப்புக்குப் பிறகு எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான வாய்ப்பாக உள்ளது. இதன் மூலம் பாலிசிதாரர் 55, 58 அல்லது 60 வயது வரை குறைக்கப்பட்ட பிரீமியங்களைச் செலுத்துவதன் மூலம் பயனடையலாம்.

இந்த லிங்கையும் கிளிக் செய்யுங்கள்👉 வெறும் 5,000/- ரூபாயில் நாமும் POST OFFICE தொடங்கலாம்..! இந்தியா போஸ்ட் அசத்தல் அறிவிப்பு!

முக்கியமான விஷயங்கள்:

வயது தகுதி:

கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்ச வயது 19 முதல் அதிகபட்சம் 55 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு தொகை:

குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 10,000/- அதிகபட்சம் ரூ.10 லட்சம் ஆகும்.

இந்த திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வசதி பெற்றுக் கொள்ளலாம்.

பாலிசிதாரர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.

5 ஆண்டுகளுக்கு முன் சரணடைந்தால், இந்தத் திட்டம் போனஸுக்குத் தகுதியற்றது.

காப்பீட்டாளரின் 59 வயது வரை எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றலாம், பிரீமியம் செலுத்துதல் நிறுத்தப்பட்ட தேதி அல்லது முதிர்வு தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் மாற்றும் தேதி வராது.

பிரீமியம் செலுத்தும் வயதை 55, 58 அல்லது 60 ஆக தேர்வு செய்யலாம்.

இந்த லிங்கையும் கிளிக் செய்யுங்கள்👉 அதிக வட்டி தரும் மூன்று போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்

எவ்ளோவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

ஒரு பாலிசிதாரர், இந்த கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் வெறும் 50 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் ரூ.35 லட்சம் வரை வருமானம் பெறமுடியும். ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 பாலிசியில் முதலீடு செய்தால், அதாவது ஒரு நாளைக்கு சுமார் ரூ.50, பாலிசி முதிர்ச்சியடைந்த பிறகு அந்த நபர் ரூ.34.60 லட்சத்தை திரும்பப் பெறுவார். ஒரு முதலீட்டாளர் 55 ஆண்டு காலத்திற்கு ரூ.31,60,000, 58 ஆண்டு காலத்திற்கு ரூ.33,40,000 மற்றும் 60 ஆண்டு காலத்திற்கு ரூ.34.60 லட்சம் முதிர்வு நன்மையைப் பெறுவார்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement