Axis Bank Fd Interest Rates in Tamil
நாம் வாழும் இந்த உலகில் இன்றைய காலகட்டத்தில் மிக மிக முதன்மையாக திகழ்வது பணம் தான். அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் நமது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை அனைவருமே மிக மிக கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்போம். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. அதனால் நமக்கு மிகவும் கடினமான சூழலில் பணம் தேவைப்படுகிறது என்றால் நாம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே தான் நமது எதிர்காலத்திற்காக சிறிதளவு சேமிக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு இன்றைய சூழலிலும் சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிக மிக பயனுள்ளதாக அமையும். அம்மா நண்பர்களே இன்றைய பதிவில் Axis Bank Fd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Axis Bank Fd Details in Tamil:
தகுதி:
இந்த Axis Bank Fd சேமிப்பு திட்டத்தில் நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
சேமிப்பு தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 2000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 120 மாதங்கள் ஆகும். அதாவது 10 ஆண்டுகள் ஆகும்.
வட்டி விகிதம்:
இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதாமாக தோராயமாக 3.00% முதல் 7.75% வரை அளிக்கப்படுகிறது.
5 வருடத்தில் 2,14,312/- பெற முடியுமா அது எப்படி
எவ்வளவு கிடைக்கும்:
ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?
நீங்கள் இந்த Axis வங்கியின் Fd சேமிப்பு திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து நீங்கள் 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு 5 வருடத்திற்கு உங்களுக்கு 82,956 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும். 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 2,82,956 ரூபாயினை பெறுவீர்கள்.
சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?
நீங்கள் இந்த Axis வங்கியின் Fd சேமிப்பு திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து நீங்கள் 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு 5 வருடத்திற்கு உங்களுக்கு 93,569 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும். 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 2,93,569 ரூபாயினை பெறுவீர்கள்.
5 வருடத்தில் 3,61,568/- அளிக்கும் கனரா வங்கி சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |