முத்துலட்சுமி மகப்பேறு திட்டம்
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் கர்ப்பிணி பெண்களுக்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயனடையலாம். மேலும் இந்த திட்டத்தினை பற்றிய முழு விவரங்கள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டம்:
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாய் வரைக்கும் தமிழக அரசு வழங்குகிறது. இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது.
இத்திட்டத்தில் உதவியின் பெற இருக்க வேண்டிய தகுதிகள்:
- கர்ப்பம் அடைந்த பெண் 19 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
- இரண்டு பிரசவங்களுக்கு மட்டும் உதவி தொகை வழங்கப்படும்.
இதையும் படியுங்கள் ⇒ கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5000 அறிவிப்பு..! பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்..!
உதவி தொகை:
தவணை | நிபந்தனை | தொகை |
1 வது தவணை | கர்ப்பமுற்று 12 வாரம் | Rs.2,000/- |
பயன் | மூன்றாவது மாதம் முடிந்த பிறகு | Rs.2,000/- |
2 வது தவணை | நான்கு மாதங்களுக்கு பிறகு | Rs.2,000/- |
பயன் | இரண்டாவது ஊட்டச்சத்து கிட் | Rs.2,000/- |
3 வது தவணை | குழந்தை பிறத்தவுடன் | Rs.4,000/- |
4 வது தவணை | குழந்தைகளுக்கு OPV/Rota/Penta valent 3வது தவணை தடுப்பூசிகள் போட்ட பிறகு | Rs.4,000/- |
5 வது தவணை | குழந்தைக்கு 9 வது மாதம் மற்றும் 12 வது மாத்திற்குள் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போட்ட பிறகு | Rs.2,000/- |
மொத்த உதவி தொகை | Rs.18,000/- |
ஊட்டச்சத்து பொருட்களின் பட்டியல்:
கர்ப்பிணி தாய்க்கு ஹெல்த் மிக்ஸ் பவுடர், IFA Syrup, விதை இல்லாத பேரிச்சம் பழம், உணவு தரும் பிளாஸ்டிக் கோப்பை, பிளாஸ்டிக் கூடை, குடற்புழு நீக்க மாத்திரை, நெய், காட்டன் துண்டு போன்றவை வழங்கப்படும்.
இத்திட்டத்தினை எப்போது பதிவு செய்ய வேண்டும்.?
கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் தெரிந்தவுடன் 12 வாரத்திற்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற வேண்டும். அல்லது 12 வாரத்திற்குள் முன் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 | Schemes |