Gram Suraksha Scheme Post Office in Tamil
மக்கள் அனைவருமே மாதம் மாதம் தான் சம்பளம் பெறுகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சில மக்கள் தினமும் சம்பளம் பெறுகிறார்கள். அதுவும் கிராம புறங்களில் உள்ளவர்கள் தினமும் தான் சம்பளம் பெறுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உதவிடும் வகையில் தான் மத்திய அரசு அதாவது போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் அதிகம் செயல்பட்டு வருகிறது. மேலும் Rural Postal Life Insurance Schemes Program இந்த திட்டத்தின் கீழ் நிறைய திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதில் மிகவும் பிரபலமான திட்டங்களில் முக்கியமான திட்டம் என்றால் Gram Suraksha Yojna திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நிறைய சிறப்பு திட்டம் அதில் உள்ள ஒரு திட்டத்தை பற்றி இப்போது தெரிந்துகொள்வோம் வாங்க..!
Gram Suraksha Scheme Post Office in Tamil:
வயது தகுதி:
இந்த திட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சமாக 55 வயது உடையவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.
காப்பீடு தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 10,000 முதல் 10 லட்சம் வரை காப்பீடு செய்யலாம். அதேபோல் இந்த திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உள்ளது. அதுவும் 4 வருடங்களுக்கு பிறகு கடன் பெற முடியும்.
அதேபோல் இந்த திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு முடித்து கொள்ளலாம். இதற்கு இடையில் பாலிசியை முடித்தால் அவர்களுக்கு போனஸ் பெறும் வசதிகள் கிடைக்காது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Rs.868 செலுத்தினால் Rs.2,00,000/- தரும் அருமையான திட்டம்..!
பணம் செலுத்தும் முறை:
Gram Suraksha Yojna பாலிசியின் படி ஒரு நபரின் பாலிசி மதிப்பு 10 லட்சம் ஆக இருந்தால், அவர்கள் மாதம் 1,515 ரூபாய் முதலீடு செய்தால் அல்லது (ஒரு நாளுக்கு 50 ரூபாய்) செலுத்தி வந்தால் அவர்களின் முதிர்வு காலம் முடியும் போது, அவர்களின் மெச்சூரிட்டிக்கு பின் அவர்களுக்கு 10 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.
அதாவது பாலிசிதாரர் தங்களின் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டத்தை தொடர்ந்து வந்தால் இந்த பாலிசிலியில் 10 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.
இந்த Gram Suraksha Yojna கீழ் நிறைய திட்டங்கள் உள்ளது. அதனை சரியாக தேர்வு செய்து உங்களின் பணத்தை சேமித்துக் கொள்ளலாம்.
தமிழக அரசு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவி தொகை வழங்குகிறது..!யாரெல்லாம் பயன் அடையலாம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |