வங்கியில் 5 வருடத்தில் 7,28,549 ரூபாய் அளிக்கும் திட்டம் பற்றி தெரியுமா.?

Advertisement

Latest FD Rate of Interest of Axis Bank in Tamil

இக்காலத்தில் சேமிப்பு  என்பது அனைவருக்கும் இன்றையமையாத ஒன்றாக இருக்கிறது. இதனை கருத்தில் பெரும்பாலானவர்கள் சேமிக்க தொடங்கிவிட்டார்கள். சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளது. அதாவது, வங்கிகளிலும் தபால் துறையிலும் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு வங்கியிலும் சேமிப்பு திட்டத்திற்கான வடிவிகிதம் என்பது மாறுபடும். ஆகையால், நாம் சேமிக்க தொடங்கும் முன்னால் எந்த வங்கியில் அதிக வட்டி வழங்கபடுகிறது என்பதை அறிந்து அதன் பிறகு சேமிப்பது அவசியம்.

ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் ஆக்ஸிஸ் பேங்கில் வழங்கக்கூடிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றான FD திட்டத்தில் வழங்கக்கூடிய வட்டி விகிதம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல், 5 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Axis Bank FD Interest Rates For 5 Years in Tamil:

வட்டி விகிதம்:

கால அளவு  ஜெனரல் சிட்டிசன்  சீனியர் சிட்டிசன்
7 முதல் 29 நாட்கள் 3% 3.50%
30 முதல் 45 நாட்கள்  3.50% 4%
46 முதல் 60 நாட்கள்  4.25% 4.75%
61 நாட்கள் முதல் 3 மாதம் வரை 4.50% 5%
3 மாதம் முதல் 6 மாதம் வரை  4.75% 5.25%
6 மாதம் முதல் 9 மாதம் வரை  5.75% 6.25%
9 மாதம் முதல் 1 வருடம் வரை  6% 6.50%
1 வருடம் முதல் 15 மாதம் வரை  6.70% 7.20%
15 மாதம் முதல் 5 வருடம் வரை 7.10% 7.60%
5 வருடம் முதல் 10 வருடம் வரை  7% 7.75%

HDFC வங்கியில் 10,000 முதலீடு செய்தால் 20,000 கிடைக்குமா

எடுத்துக்காட்டு:

ஜெனரல் சிட்டிசன்:

நீங்கள் ஆக்சிஸ் பேங்கில் FD திட்டத்தில், 5 வருட கால அளவை தேர்வு செய்து 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 7.10% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. எனவே, இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது 5 வருடத்தில் உங்களுக்கான வட்டி தொகை தொகையாக 2,10,873 ரூபாய் அளிக்கப்படுகிறது. 5 வருடத்தில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை ரூ. 5 லட்சம் மற்றும் வட்டித்தொகை ரூ.2,10,873 சேர்த்து மொத்தமாக ரூ.7,10,873  கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன்:

நீங்கள் ஆக்சிஸ் பேங்கில் FD திட்டத்தில், 5 வருட கால அளவை தேர்வு செய்து 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 7.60% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. எனவே, இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது 5 வருடத்தில் உங்களுக்கான வட்டி தொகை தொகையாக 2,28,540 ரூபாய் அளிக்கப்படுகிறது. 5 வருடத்தில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை ரூ. 5 லட்சம் மற்றும் வட்டித்தொகை ரூ.2,28,540 சேர்த்து மொத்தமாக ரூ.7,28,540 கிடைக்கும்.

வருடம் 399 ரூபாய் செலுத்தி 10,00,000 ரூபாய் பெரும் தபால் துறை பாலிசி.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement