விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வழங்கும் மத்திய அரசின் திட்டம் | Pkvy Scheme in Tamil

Advertisement

Pkvy Scheme in Tamil

விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல வகையான திட்டங்களை அமல்படுத்திவருகிறது. ஆனால் இயற்கை விவசாயத்தை பற்றி சரியான புரிதல் விவசாயிகளிடம்  இல்லை. இதற்காக மத்திய அரசு பரம்பரகத் கிருஷ் விகாஷ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு 2015-ல் அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயம் செய்யும் நபர்கள் 50,000 ரூபாய் பெற முடியும். இந்த திட்டத்தை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

Paramparagat Krishi Vikas Yojana scheme:

இந்த திட்டத்தின் மூலம் விவசாயம் செய்யும் நபர்கள் ஒரு ஹெக்டருக்கு 50,000 ரூபாய் பெற முடியும். இதை நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்தும் செயல்படலாம்

புதிதாக விவசாயம் செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இவை இயற்கை  விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் மண்புழு உரம் போன்றவற்ற வாங்குவதற்காக  நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை கடந்த 4 ஆண்டுகளாக 1997 கோடி விவசாயிகள்  பயன் அடைந்திருக்கிறார்கள். 3000 ஹெக்டர் நிலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள்

பம்பு செட்டு அமைப்பதற்கு 90% மானியம் வழங்கப்படுகிறது.! யாரெல்லாம் பயன் அடையலாம்

யாரெல்லாம் பயனடையலாம்:

18 வயதிற்கு மேல் விவசாயம் செய்யும் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

ஆவணங்கள்:

  1. ஆதார் கார்டு
  2. ரேஷன் கார்டு
  3. முகவரி சான்றிதழ்
  4. வருமான சான்று
  5. மொபைல் நம்பர்
  6. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  7. வயது சான்றிதழ்

சான்றிதழ்:

இயற்கை வேளாண்மைக்கான சான்றிதழை பெறுவதற்கு ஒரு முகவர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இடஙக திட்டத்தின் கீழ் கிளஸ்டர் அணுகுமுறை PGS சான்றிதழ் மூலம் இயற்கை வேளாண் கிராமத்தை உருவாக்குவதன் மூலம் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது.

PGS –  என்பது இயற்கை விளை பொருட்களை சான்றளிக்கும் ஒரு செயல்முறையாகும். மேலும் உற்பத்தி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தரச் சான்றுகளை உறுதி செய்கிறது. இந்த சான்றிதழ் ஒரு ஆவண அறிக்கையின் வடிவத்தில் வழங்கப்படுகிறது.

ஆழ்துளை கிணறு அமைக்க 100% மானியம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement