பம்பு செட்டு அமைப்பதற்கு 90% மானியம் வழங்கப்படுகிறது.! யாரெல்லாம் பயன் அடையலாம்

Advertisement

Pm-kusum Scheme in Tamil

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.! அது என்னன்னு யோசிக்கிறீங்களா.! மத்திய அரசு விவசாயிகள் பயன்  பெரும் வகையில் PM KUSUM – Pradhan Mantri Kisan Urja Suraksha Evem Utthan Mahabhiyan என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் பயன் அடையலாம் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

Pm-kusum Scheme in Tamil:

மத்திய அரசு விவசாயிகள் பயன்  பெரும் வகையில் PM KUSUM – Pradhan Mantri Kisan Urja Suraksha Evem Utthan Mahabhiyan என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகள் எளிய முறையில் நீர் பாசனம் அமைத்து கொள்வதற்காக சோலார் பாம்பு செட்டுகள் அமைப்பதற்கு 90% மானியம் வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டிற்கு 1 லட்சம் ரூபாய்க்கு பம்பு செட்டு அமைப்பதற்கு கொட்டேஷன் கொடுத்திருக்கிறீர்கள் என்றால் 60 மானியம் மத்திய அரசிடமிருந்து 30% வங்கி மூலமாகவும், மீதி இருக்கும் 10% 10,000 ரூபாய் மட்டும் செலுத்தி இந்த  திட்டத்தில் பயன் பெறலாம்.

ஆழ்துளை கிணறு அமைக்க 100% மானியம்..!

தகுதிகள்:

விவசாயி, விவசாயிகள் குழு, FPO அல்லது உழவர் தயாரிப்பாளர் அமைப்பு, பஞ்சாயத்து. கூட்டுறவு நிறுவனங்கள்,நீர் பயனர் சங்கங்கள் போன்றோர் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

ஆவணங்கள்:

ஆதார் அட்டை, நிலத்தின் பட்டா மற்றும் சிட்டா, மொபைல் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு புத்தகம்  போன்றவை தேவைப்படும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

இந்த திட்டத்தில் மானியம் பெற விரும்புபவர்கள் ஆன்லைனில் pm kushan என்ற வலைதளத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். ஆஃப்லைன் வழியாக என்றால் வேளாண் துறையை அணுகி இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

அசத்தலான ஆயுள் காப்பீடு..! முதிர்வு காலத்தில் லம்ப் அமௌன்ட் கிடைக்கும்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement