PM Kisan Tractor Scheme 2023 in Tamil
இந்தியாவில் உள்ள அனைத்து கிசான்/விவசாயிகளுக்கும் இந்திய அரசு டிராக்டர்களை வழங்குகிறது . பிரதமர் கிசான் டிராக்டர் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எந்த விவசாய நிலத்திலும் அத்தியாவசியப் பொருளான டிராக்டர்களை வாங்கலாம். கிசான் டிராக்டர் திட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பெரும்பகுதியை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த PM கிசான் ட்ராக்டர் திட்டத்தை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..
PM Kisan Tractor Scheme 2023:
மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில் சொந்தமாக ட்ராக்டர் வாங்குவதற்காக 50% மானியம் வழங்குகிறது.
திட்டத்தை பற்றிய தகவல்கள்:
திட்டம் | மத்திய அரசு திட்டம் |
திட்டம் யாருக்கு | விவசாயிகளுக்கு |
என்ன திட்டம் | ட்ராக்டர் வாங்குவதற்கு மானியம் |
விண்ணப்ப முறை | ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரு வழியிலும் விண்ணப்பிக்கலாம். |
விண்ணப்ப நாள் | எல்லா நாட்களிலும் விண்ணப்பிக்கலாம் |
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு | 2022 |
விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வழங்கும் மத்திய அரசின் திட்டம்
தகுதி:
விண்ணப்பதாரர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 1.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
சிறு, குறு விவசாயிகளின் அளவுகோலின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர் அவரின் பெயரில் நிலம் இருக்க வேண்டும்.
கடந்த 7 வருடங்களாக எந்த ட்ராக்டரும் வாங்கியிருக்க கூடாது.
வேறு எந்த விவசாயத்தின் மானிய அடிப்படையிலான திட்டத்தின் பயனாளியாக இருக்க கூடாது.
மானிய விலை டிராக்டரை வாங்குவதற்கு ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே தகுதியுடையவர்.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- வங்கி கணக்கு அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- பான் கார்டு
- ஓட்டுநர் உரிமம்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
விண்ணப்பத்தில் இருக்க வேண்டிய தகவல்கள்:
பிரதம மந்திரி கிசான் டிராக்டர் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான பதிவு செயல் முறை இந்திய அரசின் மற்ற திட்டங்களைப் போல ஆன்லைனில் கிடைக்காது. இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனடைய விரும்பும் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் அருகில் உள்ள பொது சேவை மையம் (CSC) அல்லது மாநில அளவிலான வேளாண்மைத் துறையைப் பார்வையிடலாம் .
இரண்டு வகையில் ஏதாவது ஒன்றிலிருந்து விண்ணப்ப படிவத்தில் சில விவரங்களை பதிவிட வேண்டும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.
- விண்ணப்பதாரர் பெயர் /விவசாயி பெயர்
- விண்ணப்பதாரர் பிறந்த தேதி
- பாலினம்
- கணவர்/ தந்தையின் பெயர்
- முகவரி
- மாவட்டம் மற்றும் கிராமம்
- மொபைல் எண்
பம்பு செட்டு அமைப்பதற்கு 90% மானியம் வழங்கப்படுகிறது.! யாரெல்லாம் பயன் அடையலாம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |