5 வருடத்தில் 14.50 லட்சம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்..!

Advertisement

Post Office NSC Scheme Full Details in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. ஐந்து வருடத்தில் 14.50 லட்சம் தரக்கூடிய ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த திட்டம் ஒரு அஞ்சலக சேமிப்பு திட்டம் ஆகும். அஞ்சலகத்தில் பொதுவாக பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைய வகையான சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. அந்த சேமிப்பு திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

அந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்றான National Saving Certificate ஸ்கீம். இந்த சேமிப்பு திட்டம் குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

National Saving Certificate Scheme Full Details in Tamil:

இது ஒரு One Time Investment Scheme அதாவது அக்கௌன்ட் ஓபன் செய்யும் போது மட்டும் ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.

இந்த ஸ்கீமினுடைய கால அளவு முடிந்த பிறகு நீங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்தீர்களோ அந்த தொகை மற்றும் அதற்குரிய வட்டி இரண்டியும் சேர்த்து உங்களுக்கு மொத்தமாக வழங்குவார்கள்.

இந்திய அரசே இந்த ஸ்கீமை செயல்படுத்துகிறது என்பதால் இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டம் ஆகும்.

18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். மைனர் குழந்தைகளின் பெயரில் அவர்களுடைய பெற்றிருக்கள் இந்த கணக்கை தொடங்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 வருடத்தில் Rs.1,60,220/- வட்டி தரும் முதலீட்டு திட்டம்..!

மேலும் இந்த முதலீட்டு திட்டத்தில் ஜாயிண்ட் அக்கௌன்ட் வசதியும் உள்ளது. அதாவது அதிகபட்சமாக மூன்று நபர் இணைந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்த ஸ்கீமினுடைய கால அளவு ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் நீங்கள் கடன் உதவியும் பெற முடியும்.

குரைந்தபட்சமாக இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதலீடு செய்து கணக்கு திறக்கலாம், அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

இந்த ஸ்கீமிற்கு தற்பொழுது நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 7.70% வட்டி வழங்கப்படுகிறது.

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

முதலீட்டு காலம் டெபாசிட் தொகை வட்டி மெச்சுரிட்டி தொகை
ஐந்து ஆண்டு 1,00,000/- Rs.44,903 Rs.1,44,903/-
3,00,000/- Rs.1,34,710/- Rs.4,34,710/-
5,00,000/- Rs.2,24,517/- Rs.7,24,517/-
10,00,000/- Rs.4,49,034/- Rs.14,49,034/-

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? போஸ்ட் ஆபீஸில் மாதம் ரூ.1400 சேமித்தால் கையில் கிடைப்பது ரூ.35 லட்சம்!

மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 Schemes
Advertisement