SBI Fixed Deposit Interest Rates
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் SBI வங்கியின் ரெகுலர் பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டத்தின் வட்டி என்ன என்பது குறித்த தகவலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்.
இந்த ரெகுலர் பிக்சட் டெபாசிட் முதலீட்டு திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தற்பொழுது வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளனர். இருப்பினும் இதனை வட்டி விகிதத்தை டிசம்பர் 27, 2023 தேதியில் இருந்து யாரெல்லாம் பிக்சட் டெபாசிட் முதலீட்டு திட்டத்தில் கணக்கு ஓபன் செய்கின்றார்களோ அவர்களுக்கு மட்டும் தான் பயனளிக்கும். சரி வாங்க SBI-யின் ரெகுலர் பிக்சட் டெபாசிட் முதலீட்டு திட்டத்திற்கு தற்பொழுது எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது? எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது குறைத்த முழுமையந்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
SBI Fixed Deposit Details in Tamil:
பொதுவாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பிக்சட் டெபாசிட் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கான குறைந்தபட்ச 1000 ரூபாய் ஆகும். அதிகபட்ச முதலீட்டு தொகை என்றால் நீங்கள் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
இந்த முதலீட்டு திட்டத்தின் கால அளவானது 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை இருக்கின்றது. ஆக உங்களுக்கு ஏற்ற முதலீட்டு காலத்தை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
60+ வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கூடுதல் வட்டி வழங்கபடுகிறது.
மேலும் இந்த முதலீட்டு திட்டத்தின் மூலம் நீங்கள் வங்கி கடன்களும் பெறலாம்.
இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டியினை மாதம்/ மூன்று மாதம்/ ஆறு மாதம்/ ஒரு வருடம் என நான்கு முறைகளில் வழங்குகின்றன. ஆக உங்களுக்கு எந்த முறை ஏற்றத்தாரோ அந்த முறையை தேர்வு செய்து உங்களுடைய வட்டியினை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 3,000 முதலீடு செய்தால் 5,06,966/- அளிக்கும் சேமிப்பு திட்டம்..!
SBI Fixed Deposit Interest Rates:
முதலீடு காலம் | பொது மக்களுக்கு | 60+ வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு |
7 நாட்கள் முதல் – 45 நாட்களுக்கு | 3.50% | 4.00% |
46 நாட்கள் முதல் 179 நாட்களுக்கு | 4.75% | 5.25% |
180 நாட்கள் முதல் 210 நாட்களுக்கு | 5.75% | 6.25% |
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கு | 6.00% | 6.50% |
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு | 6.80% | 7.30% |
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு | 7.00% | 7.50% |
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு | 6.75% | 7.25% |
5 வருடம் முதல் 10 வருடத்திற்கு | 6.50% | 7.50% |
இரண்டு வருடம் இந்த SBI பிக்சட் டெபாசிட் முதலீடு திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
ஏன் இரண்டு வருடத்தை தேர்வு செய்துள்ளோம் என்றால் இந்த கால கட்டத்தில் தான் அதிக வட்டி வழங்கபடுகிறது. ஆக இந்த காலத்தில் நாம் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
முதலீடு காலம் | பொது மக்களுக்கு | 60+ வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு |
25,000/- | 3,722 | 4,005 |
50,000/- | 7,444 | 8,011 |
1,00,000/- | 14,888 | 16,022 |
3,00,000/- | 44,664 | 48,066 |
5,00.000/- | 74,440 | 80,110 |
10,00,000/- | 1,48,881 | 1,60,221 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வங்கியில் 5 வருடத்தில் 7,28,549 ரூபாய் அளிக்கும் திட்டம் பற்றி தெரியுமா.?
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |