போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம்: Post Office Time Deposit Scheme in Tamil
Post Office One Time Deposit Scheme in Tamil – பொதுவாக நம்மிடம் பணம் இருந்தால் மட்டுமே அனைவரும் நம்மை மதிப்பார்கள். அவ்வாறு இருப்பவர்கள் நாம் கண்டுகொள்ளாமல் இருந்தாலும். நமது வாழ்க்கையை வாழ பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நமது தேவைகளை பூர்த்தி செய்ய பணம் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
பணத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் இந்த உலகில் நாம் சேமிப்பு ஒன்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் இந்த உலகில் ஓரளவு மகிழ்ச்சியாக வாழமுடியும். ஆக சேமிப்பு என்பது உங்களிடம் இருக்க வேண்டும். அனைவரும் சேமிப்பு என்பதை தொடங்க வேண்டும் என்பதற்காக தினமும் ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் குறித்த தகவலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். குறிப்பாக இந்த திட்டத்தில் மூன்று வருடம் முதலீடு செய்தாலே 2,18,738/- வரை வட்டி பெறலாமாம். சரி வாங்க அது எப்படி என்று இப்பொழுது தெரிந்துகொள்வோம்.
Post Office One Time Deposit Scheme in Tamil
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
அஞ்சல் அலுவலகத்தில் நீங்கள் இந்த டைப் டெபாசிட் முதலீட்டு திட்டத்தில் அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்து உங்களுக்கான அக்கவுண்டை ஓபன் செய்து கொள்ளலாம். அதுவே அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 வருடத்தில் 2,14,312/- பெற முடியுமா..? அது எப்படி..?
முதலீடு செய்யும் முறை:
இந்த திட்டத்தின் முதலீட்டு முறை என்னெவெற்றல் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய முடியும், அதன் முறைக்கு இந்த ஸ்கீமின் கால அளவு முடிந்த பிறகு நீங்கள் முதலீட்டு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டியை சேர்த்து பெற்றுக்கொள்ளலாம்.
முதலீட்டு காலம்:
இந்த அஞ்சலக சேமிப்பு திட்டமான டைம் டெபிசிட் முதலீட்டு திட்டத்தில் நான்கு வகையான முதலீட்டு காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம். அவற்றில் உங்களுக்கு எது ஏற்றதாக இருக்கிறதோ அதனை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
எவ்வளவு வட்டி வாங்கப்படுகிறது?
2024 தற்பொழுது ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை இந்த டைம் டெபாசிட் முதலீட்டு திட்டத்திற்கு அஞ்சல் அலுவகம் வழங்கும் வட்டி விகிதத்தை இப்பொழுது பார்க்கலாம்.
- 1 வருடத்திற்கு 6.9%
- 2 வருடத்திற்கு 7.0%
- 3 வருடத்திற்கு 7.1%
- 5 வருடத்திற்கு 7.5%
மூன்று வருடத்திற்கு முதலீடு செய்தால் அதற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?
முதலீட்டு தொகை | வட்டி | மெச்சுரிட்டி தொகை |
5,000 | 1093 | 6093 |
10,000 | 2187 | 12,187 |
50,000 | 10,936 | 60,936 |
1,00,000 | 21,873 | 1,21,873 |
3,00,000 | 65,621 | 3,65,621 |
5,00,000 | 1,09,369 | 5,09,369 |
10,00,000 | 2,18,738 | 12,18,738 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நான் முதல்வன் திட்டம் பற்றிய முழுமையான விவரங்கள்!
மேலும் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |