SCSS vs PMVV Pension Scheme in Tamil
இன்பம் துன்பம் அனைவருக்கும் இருக்கும். அந்த இன்ப துன்பத்தில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பணம் தான். ஏனென்றால் பணம் தான் முக்கிய தேவை. பணம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நாம் சம்பாதிக்கும் போது சேமிப்பது மிகவும் நல்லது. அப்படி நாம் சேமிக்கும் பணத்திற்கு வட்டி கொஞ்சம் அதிகமாக இருந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும். அதனை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கக் போகிறோம். அதுவும் இரண்டு திட்டங்களை பற்றி பார்க்க போகிறோம்..! சரி வாங்க அதை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
SCSS vs PMVV Pension Scheme in Tamil:
இந்த பதிவில் இரண்டு திட்டத்தை கூறப்போகிறோம்..! அது ஒன்று LIC நிறுவனம் வழங்குகிறது. இதனுடைய பெயர் Pradhan Mantri Vaya Vandana Yojana திட்டம். மற்றொரு திட்டம் போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. அதனுடைய பெயர் Senior Citizens’ Saving Scheme திட்டம் ஆகும். இது இரண்டிலும் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
வட்டி விகிதம்:
இந்த திட்டத்தில் 60 வயதிற்கு மேல் உள்ள நபர்கள் சேரலாம். Senior Citizens’ Saving Scheme திட்டத்தில் 8% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வட்டியை ஒவ்வொரு 3 மாத்திற்கும் ஒரு முறை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோல் Pradhan Mantri Vaya Vandana Yojana திட்டத்தில் 7.45 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தில் சேர்ந்தால் அந்த வட்டியை நான்கு விதமாக பெற்றுக்கொள்ள முடியும். மாதம் மாதம், 3 மாதத்திற்கு ஒரு முறை, வருடம், 4 வருடம் என பெற்றுக்கொள்ளலாம்.
இந்த இரண்டு திட்டத்திலும் 5 வருடம் கால அளவாக நிர்ணயம் செய்துள்ளார்கள். தற்போது இரண்டு திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் பெற முடியும் என்று கீழ் பார்க்கலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ தபால் துறையில் மாதந்தோறும் 500 ரூபாய் சேமித்தால் 39,44,600 ரூபாய் பெறும் திட்டம்
Senior Citizens’ Saving Scheme:
முதலீடு தொகை | வட்டி தொகை | மொத்த வட்டி தொகை (5y) |
2,00,000/- | 4,000/- | 80.000/- |
5,00,000/- | 10,000/- | 2,00,000/- |
10,00,000/- | 20,000/- | 4,00,000/- |
15,00,000/- | 30,000/- | 6,00,000/- |
Pradhan Mantri Vaya Vandana Yojana:
முதலீடு தொகை | வட்டி தொகை | மொத்த வட்டி தொகை (5y) |
2,00,000/- | 3,725/- | 1,49,000/- |
5,00,000/- | 9312/- | 3,72,500/- |
10,00,000/- | 18,625/- | 7,45,000/- |
15,00,000/- | 27,750/- | 11,10,000/- |
இப்போது இந்த இரண்டு திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டீர்கள் அல்லவா இனி இந்த 2 திட்டங்களில் இணைந்து தெரிந்துகொள்ளவும்.
2,000 ரூபாய் செலுத்தினால் போதும் 3,25,000 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |