ஒருமுறை மட்டுமே முதலீடு 8.20 சதவீதம் வட்டி போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Advertisement

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் – Senior Citizen Saving Scheme in Tamil

அஞ்சல் அளவுலகத்தில் பொதுவாக 9 வகையான சேமிப்பு திட்டங்களை வழங்குகிறார்கள். அவற்றில் ஓன்று தான் இந்த மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் Senior Citizen Saving Scheme என்றழைக்கப்படுகிறது. 60 வயதிற்கு மேல் உங்களுடைய ஓய்வு காலங்களில் ஒரு நிலையான வருமானத்தை பெற வேண்டும் விரும்புகிறீர்கள் என்றால் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டமான இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

சரி வாங்க இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது, யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணையலாம், எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்:

இது ஒரு சிங்கிள் இன்வெஸ்ட்மென்ட் இடம் ஆகும். ஆக ஒரு பெரிய தொகையை அக்கௌன்ட் ஓபன் செய்யும் போது ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும். அதன் பிறகு நீங்கள் எந்த ஒரு தொகையையும் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் வாங்கப்படும் வட்டியினை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்களுக்கு வாங்குவாங்க.

இந்த ஸ்கிமினுடைய கால அளவு முடிந்த பிறகு நீங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்திர்களோ அந்த தொகையை 100 சதவீதம் உத்திரவாதத்துடன் உங்களிடம் கொடுத்துவிடுவார்கள்.

60 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே இந்த ஸ்கீமை ஓபன் செய்யலாம். நீங்கள் ஏற்கனவே ஒரு பணியில் இருந்து 55 வயத்திற்கு மேல் VRS -க்கு பிளான் செய்திருந்தால் நீங்களும் இந்த ஸ்கிமில் ஜெயின் செய்யலாம்.

Defence Services-யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய 50 வயத்திற்கு மேல் இந்த திட்டத்தில் இணையலாம்.

இந்த திட்டத்தில் தனி நபராக மட்டும் இல்லாமல் ஜாயிண்ட்டாகவும் அக்கௌன்ட் ஓபன் செய்யலாம். ஜாயிண்ட் அக்கவுண்டக இந்த திட்டத்தில் இணைய விரும்பினால் தங்களுடைய கணவன் அல்லது மனைவி சேர்த்து தான் இந்த கணக்கில் ஜாயிண்ட் அக்கௌன்ட் ஓபன் செய்ய முடியும்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
SBI வங்கியில் 500 முதலீடு செய்தால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்..?

முதலீட்டு தொகை:

இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 1000 ரூபாய், அதிகபட்சமாக 30 லட்சம் ஆகும்.

இவற்றில் நீங்கள் 1 லட்சம் ரூபாய் வரை நீங்கள் பணமாக கொடுத்து அக்கௌன்ட் ஓபன் செய்து கொள்ளலாம். 1 லட்சத்திற்கும் அதிகமான தொகையில் இந்த கணக்கை ஓபன் செய்ய விரும்பினால் DD அல்லது Chack leaf கொடுத்து தான் அக்கௌன்ட் ஓபன் செய்ய முடியும்.

சிக்கிமின் கால அளவு:

இந்த ஸ்கீமுன் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஐந்து வருடம் முடிந்த பிறகு நீங்கள் இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று விரும்பினால் 3 வருடம் வரை நீட்டித்துக்கொள்ளலாம். திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்றால் இந்த திட்டத்தின் 4 நான்காவது வருடத்திலேயே அப்ளை செய்ய வேண்டும்.

வட்டி:

இந்த திட்டத்திற்கு தற்பொழுது வாங்கலாம் வட்டி 8.20 சதவீதம். இருப்பினும் இந்த ஸ்கிமினுடைய வட்டி விகிதத்தை இந்திய அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைப்பார்கள். என்றாலும் நீங்கள் அக்கௌன்ட் ஓபன் செய்யும் போது உங்களுக்கு எவ்ளவு வட்டி வழங்கப்பட்டதோ அந்த வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு என்று ஐந்து வருடத்திற்கு வழங்குவார்கள்.

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

முதலீட்டு காலம் முதலீட்டு தொகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் வட்டி மொத்த வட்டி தொகை
5 வருடம் Rs.1,00,000/- Rs.2,050/- Rs.41,000/-
Rs.5,00,000/- Rs.10,250/- Rs.2,05,000/-
Rs.10,00,000/- Rs.20,500/- Rs.4,10,000/-
Rs.15,00,000/- Rs.30,750/- Rs.6,15,000/-
Rs.30,00,000/- Rs.61,500/- Rs.12,30,000/-

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
தங்க பத்திர விற்பனை இந்த ஆண்டு எப்போது முக்கிய அறிவிப்பு

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement