தங்க பத்திர விற்பனை இந்த ஆண்டு எப்போது முக்கிய அறிவிப்பு

Advertisement

Sovereign Gold Bond Scheme 2023-24 in Tamil

நண்பர்களுக்கு வணக்கம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா Sovereign Gold Bond அதாவது தங்க முதலீட்டு பத்திரத்தை இந்த டிசம்பர் மாதம் அதாவது இந்த மாதம் அறிவிக்க உள்ளனர். ஆக எந்த தேதியில் அறிவிக்க உள்ளனர் என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த தங்க முதலீட்டு பத்திரத்தை வாங்கலாம். இதன் மூலம் உங்களுக்கு  கிடைக்கும். சரி வாங்க தங்க பத்திர விற்பனைக்கு வரும் என்பது குறித்த விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தங்க முதலீட்டு பாத்திரம் 2023-24 | Sovereign Gold Bond Scheme 2023-24 in Tamil:Sovereign Gold Bond

இந்த காலத்தில் நம்மிடம் ஒரு பெரிய தொகை இருந்து அதனை ஏதாவது முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் என்றால் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.  ஏன் என்றால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. ஆக நாம் வாங்கிய விலையை விட விற்கும்போது அதிகமான லாபத்தை பெறலாம். இந்த காரணத்தினால் தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்கத்தை நீங்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்குவதை விட. எலக்ட்ரானிக் முறையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த Sovereign Gold Bond மூலமாக நீங்கள் வாங்கினால் இரண்டு விதமான லாபத்தை நீங்கள் பெறமுடியும்.

நாம் எவ்வளவு தொகையை இந்த திட்டத்தில் முதலீடு செய்கின்றோமோ அந்த தொகைக்கு சமமான தங்கத்தை Certificate-ஆக அதாவது இந்த Sovereign Gold Bond-ஆக எலக்ட்ரானிக் முறையில் உங்களுக்கு வழங்குவாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் அருமையான காப்பீட்டு திட்டத்தில் மாத தொகையாக 50 ரூபாய் செலுத்தினால் போதும்.

இந்த பாண்டினுடைய கால அளவு எட்டு வருடம். எட்டு வருடத்திற்கு பிறகு இந்த பாண்டை நீங்கள் விற்கும் போது அன்றைய தேதியில் சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை எவ்வளவோ அந்த தொகைக்கு விற்பனை செய்யலாம்.

தங்கத்தின் விலை சந்தையில் ஒவ்வொரு நாளும் அதிகமாவதினால் 8 வருடத்திற்கு பிறகு நீங்கள் வாங்கிய விலையை விட அதிகமான விலையில் தான் இருக்கும்.

ஆக 8 வருடத்திற்கு பிறகு இந்த பாண்டை விற்பனை செய்து நல்ல லாபத்தை பெறமுடியும். மேலும் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஒவ்வொரு வருடமும் 2.5% வட்டி வழங்கப்படுகிறது.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்த பாண்டை வழங்குவதினால் இது மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம் ஆகும்.

இந்த பாண்டை இந்திய குடிமக்கள் அனைவருமே வாங்கலாம். அதுவும் தனி நபராக அல்லது கூட்டாகவும் இந்த பாண்டை வாங்கலாம்.

இந்த பாண்டை எங்கெல்லாம் வாங்கலாம் என்றால் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கலாம். இது தவிர அஞ்சல் அலுவலகத்தில் வாங்கலாம்.

ஆக இந்த பாண்டில் நீங்கள் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் குரைந்தபட்சம் 1 கிராமாவது வாங்க வேண்டும். அதிகபட்சமாக தனி நபராக இருந்தால் 4 கிலோ கிராம் வரை வாங்கலாம். அதுவே நீங்கள் ட்ரஸ்ட்டு மூலமாக வாங்கினால் 20-வது கிலோ கிராம் வரைக்கும் வாங்கலாம்.

பணமாக கொடுத்து இந்த பாண்டை வாங்கினால் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கலாம். 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய வேண்டும் என்றால் Demant Draft, Check, Digital ஆகிய முறைகளில் ஏதாவது ஒரு முறையில் பணம் செலுத்தி வாங்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் மாதம் வருமானம் தரும் LIC -யின் புதிய ஜீவன் உமங் திட்டம்..!

தங்க பத்திர விற்பனை எப்போது முக்கிய அறிவிப்பு?

தங்க முதலீட்டு பத்திரத்தை வாங்க விரும்புபவர்கள் வருகின்ற 18.12.2023 தேதி முதல் 22.12.2023 தேதி வரை நீங்கள் எந்த தேதியில் வேண்டும் மானாலும் வாங்கிக்கொள்ளலாம்.

இந்த பாண்டை வாங்கிய பிறகு உங்களுக்கான சான்றிதழை டிசம்பர் 28, 2023 தேதிக்கு பிறகு நீங்கள் பாண்டு வாங்கும் போது எந்த மெயில் ஐடியை கொடுத்தார்களோ.. அந்த மெயில் ஐடிக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவினுடைய அதிகாரப்பூர்வ மெயில் ஐடியில் இருந்து சென்ட் செய்வார்கள்.

ஒரு கிராம் தங்கத்திற்கு எவ்வளவு கோல்ட் ரேட் நிர்ணயம் செய்வார்கள் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆக அந்த தகவல் வரும் வரை காத்திருப்போம்.

மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 Schemes
Advertisement