யுரேனஸ் கிரகத்தில் 1 ஆண்டு என்பது பூமியில் எத்தனை ஆண்டுகள் தெரியுமா..?

Advertisement

1 Year On Uranus Is How Many Years On Earth in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! மனிதனாக பிறந்த அனைவருக்குமே மனதில் பல ஆசைகள் இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் விண்வெளி பயணமும் ஓன்று. நாம்  அனைவருமே வானத்தில் என்ன தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம். ஆனால் நம் அனைவராலும் விண்வெளிக்கு செல்ல முடியாது. அப்புறம் எப்படி தான் விண்வெளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வது என்று சொல்வீர்கள். அதற்கு தான் எங்கள் பொதுநலம்.காம் பதிவு இருக்கிறது. இந்த பதிவில் விண்வெளியில் நடக்கும் விஷயங்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!

பூமியில் 1 நாள் என்பது விண்வெளியில் எவ்வளவு நேரம் இருக்கும் என்று தெரியுமா

யுரேனஸ் கிரகத்தில் 1 ஆண்டு என்பது பூமியில் எத்தனை ஆண்டுகள்: 

யுரேனஸ் கிரகத்தில் 1 ஆண்டு என்பது பூமியில் எத்தனை ஆண்டுகள்

பொதுவாக நாம் அனைவருமே விண்வெளி பற்றியும் சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் பற்றியும் சிறு வயதில் படித்திருப்போம். ஆனால் அது எதுவும் இப்பொழுது நமக்கு நினைவில் இருக்காது. சரி அதை விடுங்க. இது நம் அனைவருக்குமே உள்ள பிரச்சனை தான்.

சரி யுரேனஸ் கிரகத்தில் 1 ஆண்டு என்பது பூமியில் எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி இங்கு காணலாம்.

ஒரு மனிதன் விண்வெளியில் எத்தனை வினாடிகள் வரை உயிர்வாழ முடியும்..?

யுரேனஸ் நமது சூரிய குடும்பத்தின் 7 ஆவது கிரகம் ஆகும். சூரிய குடும்பத்தின் மற்ற கிரகங்களில் இருந்து வேறுபட்ட ஒரு சிறப்பு அம்சத்தை கொண்ட ஒரே கிரகம் யுரேனஸ் தான். யுரேனஸ் சுமார் 90 டிகிரி சாய்வுடன் அதன் அச்சில் சுழலும் ஒரே கிரகமாக இருக்கிறது.

இதனால் யுரேனஸ் கிரகத்தில் எந்தப் பருவமாக இருந்தாலும் அது உச்சத்தில் தான்  இருக்கும். அதாவது துருவப் பகுதிகளில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சூரிய ஒளி இருக்கும். பிறகு அதே எண்ணிக்கையில் தொடர்ச்சியாக இருள் இருக்கும்.

 அதுபோல யுரேனஸ் கிரகத்தில் 1 ஆண்டு என்பது பூமியில் 84 ஆண்டுகளுக்குச் சமம் என்று நாசா தெரிவித்துள்ளது. அதாவது யுரேனஸ் கிரகத்தில் 1 ஆண்டு என்பது பூமியில் 30,687 நாட்களுக்குச் சமம். இந்த யுரேனஸ் கோள், சூரியனை ஒரு சுற்று சுற்றி முடிக்க 84 ஆண்டுகள் ஆகும். 
பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும் 

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 
Advertisement