Moon Information
பொதுவாக குழந்தை பருவத்தில் பள்ளி படிக்கும் போது அனைவருக்கும் அறிவியல் பாடத்தின் மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். அதுமட்டும் இல்லாமல் நமக்கு அதில் படிக்கப்படிக்க நிறைய விஷயங்கள் புதிதாக தெரியவரும். இவற்றை எல்லாம் சிறு வயதிலேயே கற்றுக்கொண்டு சிலர் காலப்போக்கில் அறிவியல் விஞ்ஞானியாக ஆனவர்களும் இருக்கிறார்கள். அதனை போலவே நாம் தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் அறிவியலை பற்றி நமக்கு தெரியாமலேயே படித்துக்கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் அது நமக்கு தெரிவது இல்லை. அறிவியலை பொறுத்தவரை நமக்கு ஒரு விஷயம் தெரிந்து இருக்கிறது என்று நினைத்து இருப்போம். ஆனால் அதில் நமக்கு தெரியாத எண்ணற்ற விஷயங்கள் குவிந்து இருக்கிறது. அந்த வகையில் இன்று தினமும் நாம் பார்த்து கொண்டிருக்கும் நிலா பற்றி நமக்கு தெரியாத விஷயங்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
நிலா பற்றிய தகவல்கள்:
நிலா பார்ப்பதற்கு பளிச்சென்று அழகாக இருந்தாலும் கூட அது சூரியனை போல தானாக ஒளிருவது இல்லை. பகலில் சூரியனின் ஒளியினை உள்வாங்கி அதன் பின்பு தான் அது இரவில் ஒளிருகிறது.
அதுபோல 3,476 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட பாறையாக காணப்படும் இந்த நிலவின் வயது ஆனது தோராயமாக சுமார் 4.53 பில்லியன் வருடங்கள் ஆகும்.
இத்தகைய நிலவிற்கு பூமிக்கு இடையே உள்ள தூரம் என்று பார்த்தால் தோராயமாக 3,84,000 கிலோ மீட்டர் என்று கூறப்படுகிறது.
நிலாவின் மேல் பகுதியினை சென்றடையும் போது சூரியனின் வெப்பநிலை 127 °C ஆகவும் அதுவே கீழ் பகுதியினை சென்றடையும் போது -150 °C ஆகவும் உள்ளது.
👉 வானத்தின் உண்மையான நிறம் என்ன தெரியுமா
நிலா ஆனது சூரிய குடும்பத்தில் உள்ள 5-வது பெரிய துணைக்கோளாக குறிப்பிடப்படுகிறது.
மேலும் பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கினை தான் நிலவின் மேற்பரப்பு ஈர்ப்பு விசையாக கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் நிலாவில் நீர் என்பது இல்லாமல் இருப்பதற்கான காரணமாக என்னவென்றால் அங்கு வளிமண்டலம் இல்லாததே ஆகும்.
ஒரு நீள் வட்டப்பாதையில் நிலவு ஆனது பூமியை சுற்று வர ஆகுவதற்கான நாட்கள் 29.32 நாட்கள் ஆகும்.
நாம் வாழும் பூமியின் உண்மையான நிறம் என்ன தெரியுமா.. |
நிலவின் வேறு பெயர்கள்:
- திங்கள்
- பிறை
- அம்புலி
- சந்திரன்
- நிலவு
- மதி
விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |