விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

Why is space silent in tamil

Why Is Space Silent 

ஹலோ பிரண்ட்ஸ்..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும். மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல ஆசைகள் இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் விண்வெளி பயணமும் ஓன்று. நண்பர்களே நான் சொல்வது உண்மை தானே..! உங்களுக்கும் இதுபோல விண்வெளியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை இருக்கிறதா இல்லையா..?

ஆசை மட்டும் இருந்து என்ன செய்வது நம்மால் தான் விண்வெளிக்கு செல்ல முடியாதே. அங்கு நடக்கும் விஷயங்களை நாம் எப்படி தெரிந்து கொள்வது என்று சொல்பவரா நீங்கள். உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் விண்வெளியில் நடக்கும் சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பூமியில் 1 நாள் என்பது விண்வெளியில் எவ்வளவு நேரம் இருக்கும் என்று தெரியுமா

விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது..? 

விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது

பொதுவாக பூமியில் இருப்பவர்கள் விண்வெளிக்கு சென்று வந்தாலும் அங்கு வாழ முடியாது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதுபோல விண்வெளியில் நாம் கத்தினாலும் அது யாருக்கும் கேட்காது. இவ்வளவு ஏன் நம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட நாம் கத்தினால் கேட்காதாம்.

விண்வெளியில் ஏன் சத்தம் கேட்காது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.

ஒரு மனிதன் விண்வெளியில் எத்தனை வினாடிகள் வரை உயிர்வாழ முடியும்

விண்வெளி எப்பொழுதும் அமைதியாக தான் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. விண்வெளியில் காற்று இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆம் உண்மையில் விண்வெளியில் காற்று கிடையாது.

காரணம்  விண்வெளி ஒரு வெற்றிடம். அதனால் ஒலி அலைகள் வெற்றிடத்தில் பயணிக்க முடியாது. அதாவது பூமியிலிருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில் ‘விண்வெளி’ தொடங்குகிறது. அங்கு நமது கிரகத்தைச் சுற்றியுள்ள காற்றின் ஓடு மறைந்துவிடும். அதனால் விண்வெளியில் காற்று நுழைவது இல்லை. அதன் காரணமாக விண்வெளி அமைதியாக இருக்கிறது.  

பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும் 

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science